1,463 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு அரசாணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

1,463 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு அரசாணை வெளியீடு

1,463 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு அரசாணை வெளியீடு 

பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி கல்வித்திட்டத்தை சீரியமுறையில் செயல்படுத்த பள்ளி ஒன்றுக்கு ஒரு கணினி பயிற்றுனர் பணியிடம் வீதம், அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் 1,880 கணினி பயிற்றுனர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. 

 இந்த நிலையில் தற்போது உள்ள 1,564 கணினி பயிற்றுனர் தற்காலிக பணியிடங்களின் தொடர் நீட்டிப்பு காலம் 2019 டிசம்பர் மாதத்துடன் நிறைவுபெற்றது. இதில் பயன்படுத்தாமல் உள்ள இடங்கள் தவிர, மீதமுள்ள 1,463 கணினி பயிற்றுனர் நிலை-2 பணியிடங்களுக்கு 1.1.2020 முதல் 31.12.2022 வரை 3 ஆண்டுகளுக்கு தற்காலிக பணியிடங்களுக்கான தேவைக்குறித்து நிதித்துறை ஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment