உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து புதிய அறிவிப்பாணையை இன்று தாக்கல் செய்ய உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து புதிய அறிவிப்பாணையை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து புதிய அறிவிப்பாணையை இன்று தாக்கல் செய்ய உத்தரவு 

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதா கவும் 12-ம் வகுப்பு தேர்வுகள் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தபிறகு நடத்தப்படும் எனவும் மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. அதையடுத்து இதுதொடர்பான புதிய அறிவிப் பாணையை இன்று தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். 

 மார்ச் மாதம் நடத்தப்பட வேண் டிய சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கரோனா ஊரடங்கு காரணமாக ஜூலை 1 முதல் 15 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுகளை இந்தியா முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் எழுத இருந்தனர். 

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்த நிலையில், சிபிஎஸ்இ-யும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். 

 கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சிபிஎஸ்இ வாரி யம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அமித் பத்லா உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

 இந்த மனு நேற்று நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜ ராகி, ‘‘தற்போதுள்ள சூழலில் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப் படவிருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. 

இதற்கு முன்பாக நடத்தப்பட்ட 3 தேர்வு களின் அடிப்படையில் சராசரி மதிப் பெண் கணக்கிடப்படும். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தேர்வு நடத்தப்படும். அப்போது விருப்பம் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம். தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்களுக்கு இதற்கு முன்பாக நடந்த 3 தேர்வு களில் பெறப்பட்ட மதிப்பெண் களின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்" என்றார்.

  நீதிபதி கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கரோனா நிலைமை கட்டுக்குள் வந்தபிறகு 12-ம் வகுப்புக்கு தேர்வு நடத்தப்படும் எனக் கூறுகிறீர்கள். ஆனால் தற்போது மாநிலத்துக்கு மாநிலம் நிலைமை வெவ்வேறாக உள்ளதே, பிறகு எப்படி தேர்வு நடத்த முடியும் என கேள்வி எழுப்பினர். அதற்கு துஷார் மேத்தா இதுதொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார். 

  இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: 

 பொதுத்தேர்வுகள் தொடர்பாக நாடு முழுவதும் மத்திய அரசு எடுக்கும் முடிவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எனவே, இதுதொடர்பாக புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது என்பது குறித்தும் விருப்பம் உள்ளவர்கள் பின்னர் தேர்வு எழு திக்கொள்ளலாம் என்பது குறித்தும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் அதில் தெளிவாக விவரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

 அதேநேரம் உயர் படிப்பு களுக்கான பிற நுழைவுத் தேர்வு களையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, இதுதொடர் பாக அனைத்து அம்சங்களையும் தெளிவாக குறிப்பிட்டு புதிய அறிவிப்பாணையை இன்று (ஜூன் 26) தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோல ஐசிஎஸ்இ வாரியம் சார்பில் நடத்தப்பட வேண்டிய பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப் படுவதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment