மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு 

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக் குச் சென்று நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடு களை மாவட்ட ஆட்சியர்கள் மேற் கொள்வார்கள். 

 மாற்றுத் திறனாளிகள், நிவார ணத் தொகை வழங்க உள்ள அலு வலரிடம் விநியோக படிவத்தில் உள்ள விவரங்களை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டை யின் அசலைக் காண்பித்து நகலை நிவாரணத் தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவார ணத் தொகையை பெற்று கொள் ளலாம். 

நிவாரணத் தொகை வழங் கும் அலுவலர் இரண்டு ரூ.500 நோட்டுகளையே பயனாளி களுக்கு வழங்க வேண்டும். இவ்வுதவி மறுக்கப்படும் நிலை யில் அல்லது கிடைக்கப் பெற வில்லை எனில் 18004250111 என்ற மாநில அளவிலான உதவி மைய எண்ணை மாற்றுத் திறனாளிகள் தொடர்பு கொள்ளலாம். 

 நிவாரணம் வழங்குவதில் ஏதேனும் முறைகேடு தெரியவந் தால் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள் ளார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment