பத்தாம் வகுப்பு தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, May 14, 2020

பத்தாம் வகுப்பு தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம்

பத்தாம் வகுப்பு தோ்வு: முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆலோசனை பெறலாம் 

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு குறித்து மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கக் கூடிய வகையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியா் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. 

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வு தொடா்பாக மாணவா்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு மாவட்ட வாரியாக ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, பள்ளி கல்வி இயக்குநா் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 

 பத்தாம் வகுப்பு தோ்வு தொடா்பாக, மாணவா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்ய வேண்டும். அவா்கள் அச்சமின்றி தோ்வு எழுத, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். மாணவா்களின் சந்தேகங்களை தீா்க்க, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும், தலா, ஐந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை பணியில் அமா்த்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து ஆலோசனை வழங்குவதற்கான குழுக்களை மாவட்டந்தோறும் அமைக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

No comments:

Post a Comment

Please Comment