வெயிலை கொண்டாடும் பெண்கள் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Sunday, May 17, 2020

வெயிலை கொண்டாடும் பெண்கள்

வெயிலை கொண்டாடும் பெண்கள் 

பெண்கள் வெயிலை கொண்டாடவேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் சூரிய கதிர்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின்-டி பெண் களின் எலும்பு வளர்ச்சி, பற்களின் பலத்திற்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்கவும், நாள்பட்ட நோய்களை கட்டுக்குள் கொண்டு வரவும், புற்றுநோயை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வைட்டமின்-டி சத்து தேவைப்படுகிறது. 

வைட்டமின்-டி சத்து மனிதர்களுக்கு மிக அவசியம் என்பதால் இயற்கையே மனமுவந்து அதனை சூரிய கதிர்கள் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட இந்தியர்கள் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன்தான் வாழ் கிறார்கள். 

சூரிய ஒளி படாத வீடுகளில் வசிப்பது, உடலை முழுவதுமாக உடைகளால் மூடிக்கொள்வது, முரண்பாடான உணவு பழக்கம், வாழ்வியல் முறை சிக்கல்கள் போன்றவைகள் இந்த பற்றாக்குறை நீடிக்க காரணமாக இருக்கின்றன. இந்த பற்றாக்குறை தென்னிந்திய பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. கிராமப்புற பெண்களில் 90 சதவீதம் பேரும் நகரப்பகுதிகளில் உள்ள பெண்களில் 85 சதவீதம் பேரும் வைட்டமின்-டி பற்றாக்குறையுடன் இருக் கிறார்கள். 

இதை ஈடுகட்ட மாத்திரைகளை டாக்டர்கள் வழங்கினாலும், மருந்தாக அதை பெறுவதைவிட, இயற்கையாக பெறுவதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது. தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உள்ள வெயில் உடலில் பட்டால் போதும். சூரியனில் இருக்கும் அல்ட்ரா வயலட்-பி கதிர்கள் உடலில் பட்டு வைட்டமின்-டி தயாரிப்பு பணிகளுக்கு உதவிபுரிகிறது. 

வெயில் மட்டுமின்றி பால் மற்றும் பால் வகை பொருட்கள், முட்டை, மீன், பிஷ்லிவர் ஆயில் போன்றவைகளிலும் வைட்டமின்-டி சத்து இருக்கிறது. குழந்தைகளிடம் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அவர்களை தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று விளையாட அனு மதிக்கவேண்டும். வயதானவர்கள் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வெயில் உடலில் படும்படி நிற்கவேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வீட்டு பால்கனியை திறந்து வைத்து காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் வெயில் படும்படி உட்கார்ந்திருக்கவேண்டும். 

 கர்ப்பிணிகள் பால், முட்டையை அன்றாட உணவில் சேர்க்கவேண்டும். உடல் குண்டாக இருந்தால் வைட்டமின்-டி பற்றாக்குறை ஏற்படும். அதனால் எப்போதும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் சிறிது நேரமாவது உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் விதத்தில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலில் வைட்டமின்-டி பற்றாக்குறை இருக்கிறதா என்பதை பரிசோதித்து, அதற்கு தீர்வு காண்பது நல்லது.

No comments:

Post a Comment

Please Comment