ஓய்வு வயது ஒரு ஆண்டு அதிகரிப்பு அரசு வேலை தேடுவோருக்கு சலுகை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, May 19, 2020

ஓய்வு வயது ஒரு ஆண்டு அதிகரிப்பு அரசு வேலை தேடுவோருக்கு சலுகை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வு வயது ஒரு ஆண்டு அதிகரிப்பு அரசு வேலை தேடுவோருக்கு சலுகை கேட்ட வழக்கு தள்ளுபடி 

ஐகோர்ட்டு உத்தரவு ஓய்வு வயது ஒரு ஆண்டு அதிகரிப்பு அரசு வேலை தேடுவோருக்கு சலுகை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு சென்னை, மே.19- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும், நிவாரண பணிகளுக்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதால், நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஈட்டு விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பல இளைஞர்களின் கனவு கேள்விக்குறியாகும் என்பதால், அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சூர்யா வெற்றி கொண்டான் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

 அந்த வழக்கு மனுவில், ‘அரசு வேலையில் சேருவதற்கான அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 34 வயதை கடந்தோர், அரசின் தற்போதைய அறிவிப்பால் பாதிக்கப்படுவார்கள். அதனால், அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கும் வகையில், தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கூறப்பட்டிருந்தது. 

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர், ‘அரசு உத்தரவினால், மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. அரசுப் பணிகள் தொடர்பான விவகாரங்களில், பொதுநல வழக்கை தாக்கல் செய்ய முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Please Comment