மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ பயிற்சி - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, May 20, 2020

மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ பயிற்சி

மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ பயிற்சி 


‘இந்து தமிழ் திசை’, ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ நடத்தும் மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ பயிற்சி 2-வது முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்யலாம் இந்து தமிழ் திசை’ நாளிதழ்இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ எனும் இணைய வழி விவசாய பயிற்சி 2-வது முகாமில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்யலாம். கரோனா ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணையம் வழியே பல்வேறு செயல்பாடுகளை முன் னெடுத்து வருகிறது. 


‘லிட்டில் ஃபார்மர்’அந்த வகை யில், ‘டிஹெச்ஐ ஃபவுண்டேஷன்’ உடன் இணைந்து பள்ளி மாண வர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ எனும் இணையவழி விவசாய பயிற்சி முகாம் மே 14 முதல் 17 வரை 4 நாட்கள் நடைபெற்றன. இந்த முகாமில், வீட்டுத் தோட் டம் அமைத்தல், இயற்கை விவசாய அறிமுகம், விவசாய வகைகளும் கூறுகளும், சமையலறை விவசா யம், விவசாய பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டன. 


இதில், 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளும் பெற்றோரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களின் வேண்டு கோளை ஏற்று 2-வது பயிற்சி முகாம் விரைவில் நடைபெறவுள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் ‘டிஹெச்ஐ ஃபவுண் டேஷன்’ நிறுவனரும் வேளாண் அறிஞருமான டாக்டர் திவ்யா வாசு தேவன் கலந்துகொண்டு விவசா யம் தொடர்பான ஆலோசனை களை வழங்குகிறார். இம்முகாமில் பங்கேற்க செல்போன் இருந்தால் போதுமானது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://connect.hindutamil.in/agricamp.php இணையதளத்தில் ரூ.249/- கட் டணம் செலுத்தி பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment

Please Comment