சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, May 19, 2020

சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு

கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் சுகாதாரத் துறை பணியாளர்களை ஊக்குவித்த இந்திய சிறுமிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு 

 நியூயார்க் 

கரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களை ஊக்குவித்த, இந்திய வம்சாவளி சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டினார். அமெரிக்காவில் லட்சக்கணக் கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை மருத் துவர்கள் அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஸ்ராவ்யா அன்னப்பரெட்டி உள்ளிட்ட 3 சிறுமிகள், பிஸ்கட்கள் வழங்கி ஊக்குவித்தனர். 

சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு பிஸ்கட் களை ஸ்ராவ்யா உள்ளிட்ட 3 சிறுமிகள் வழங்கினர். மேலும் அவர் களுக்கு வாழ்த்து அட்டைகளையும் ஸ்ராவ்யா அனுப்பியுள்ளார். இவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து, சமூக வலை தளத்திலும் பதிவிட்டனர். 

இந்நிலையில் சிறுமி ஸ்ராவ் யாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் அழைத் துப் பாராட்டினர். அவருக்கு பரிசு களை ட்ரம்ப் வழங்கி ஊக்குவித் தார். அப்போது ட்ரம்ப் கூறும் போது, “கரோனா வைரஸை எதிர்த் துப் போராடும் சுகாதாரப் பணி யாளர்களின் வீரம், துணிச்சல், அர்ப்பணிப்பு, அன்பு ஆகியவற்றை நினைத்து பிரமிப்பு அடைகிறேன். சிறுமிகளின் சேவையை வெகு வாகப் பாராட்டுகிறேன். 

அவர் களது சேவை என்னை நெகிழச் செய்து விட்டது" என்றார். ஸ்ராவ்யாவுடன் மேலும் 2 சிறுமி களும் நேரில் அழைத்துப் பாராட்டப் பட்டனர். சிறுமி ஸ்ராவ்யா, அமெ ரிக்காவில் உள்ள சாரணியர் (ஸ்கவுட்) பிரிவில் இணைந்து சேவையாற்றி வருகிறார். ஸ்ராவ்யா, ஆந்திர மாநிலம் குண் டூரைச் சேர்ந்தவர். 

ஸ்ராவ்யாவின் பெற்றோர் வேலை நிமித்தமாக அமெரிக்காவில் குடியேறி தங்கி விட்டனர். ஸ்ராவ்யாவுடன், சிறுமி கள் லைலா கான், லாரன் மேட்னி ஆகியோர் மொத்தம் 100 அட்டைப் பெட்டிகளில் பிஸ்கட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Please Comment