மாணவர்களுக்கான ஆன்லைன் அபாகஸ் பயிற்சி நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மாணவர்களுக்கான ஆன்லைன் அபாகஸ் பயிற்சி நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

மாணவர்களுக்கான ஆன்லைன் அபாகஸ் பயிற்சி நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது 
மாணவர்களுக்கான ஆன்லைன் அபாகஸ் பயிற்சி நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

 சென்னை 

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘எஸ்ஐபி அபாகஸ்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 3 நாள் ஆன்லைன் அபாகஸ் பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது. கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாண வர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல் பாடுகளை முன்னெடுத்து வரு கிறது. வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக பங்கேற்க முடிவதால், இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர் வத்துடன் பங்கேற்று வருகின்றனர். 

மாலை 5 முதல் 6 மணிவரை 

 அந்த வகையில், எஸ்ஐபி அபாகஸ் (SIP abacus) உடன் இணைந்து பள்ளி மாணவர்களுக் கான அபாகஸ் பயிற்சி முகாம் நாளை முதல் 3 நாட்கள், தினமும் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில், கவனிக்கும் திறன், கணிதத் திறன், படித்ததை நினைவூட்டுதல், தன்னம்பிக்கை, பார்த்ததை நினைவில் வைத்தல் ஆகிய திறன்களை அதிகரிப்பதற் கான ஆலோசனைகள் வழங்கப் படும். இந்த முகாமில் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.  

பதிவு கட்டணம் ரூ.294 

 இதில் பங்கேற்க செல்போன் மற்றும் லேப்டாப் அவசியம் இருக்க வேண்டும். அபாகஸ் பயிற்சியை செயலி (APP) மூலம் கற்றுக் கொள்ள செல்போனும், ZOOM APP வழியாக நேரடியாகப் பங் கேற்க லேப்டாப்பும் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://connect.hindutamil.in/abacus.php என்ற இணைய தளத்தில் பதிவுக் கட்டணமாக ரூ.294 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Please Comment