என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கும் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, May 17, 2020

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கும்

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கும் அதிகாரிகள் தகவல் 

 சென்னை, மே.17- 

கொரோனா ஊரடங்கால் கல்வி சார்ந்த பணிகளும் முடங்கி போய் இருக்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடர்பான பணிகள், கொரோனா நோய்த் தொற்று காரணமாக இதுவரை தொடங்கப்படாமல் அப்படியே இருக்கிறது. 

 முதலில் ஆன்லைனில் விண்ணப்ப பதிவு செய்த பிறகு, கலந்தாய்வும் ஆன்லைனில் நடைபெறும். அந்த வகையில் அடுத்த கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வுக்கான பணிகள் எப்போது தொடங்கும்? என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். 

 இந்தநிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் தயாராக இருக்கிறது என்றும், பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க ஆரம்பித்ததும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் சமீபத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். 

 இதன் தொடர்ச்சியாக தற்போது என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான ஆன்லைன் பதிவு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் ஜூன் மாதம் 10-ந்தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது. 

 இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கலந்தாய்வுக்கான அனைத்து பணிகளும் தயார்நிலையில் உள்ளன. அதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன. அதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment

Please Comment