துளிர் சமையல் குறிப்புகள் (14-05-2020) அவசியம் படிங்க... அருமையான தகவல்கள்... - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Thursday, May 14, 2020

துளிர் சமையல் குறிப்புகள் (14-05-2020) அவசியம் படிங்க... அருமையான தகவல்கள்...

துளிர் சமையல் குறிப்புகள் (14-05-2020) அவசியம் படிங்க... அருமையான தகவல்கள்...



🔟மட்டன் குழம்பு ருசியாக செய்ய வேண்டுமா...?


👉 மட்டன் துண்டுகள் மற்றும் எலும்பு துண்டுகளை சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு பூண்டு, இஞ்சி மற்றும் சின்ன சீரகம் சோ;க்கும்போது நல்ல ஜீரண தன்மையை கொடுப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.

👉 ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் ரெடி.

👉 மீனுடன் பூண்டு, வெந்தயம், கறிவேப்பிலை, புளி, மிளகாய், உப்பு இவையாவும் சேரும்போது சுவை கூடுகிறது. மீன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

👉பொதுவாக ஒரு 100 கிராம் மட்டன் துண்டுகளை எடுத்து தனியாக சூப் செய்வது மிகவும் சுலபம். இந்த சூப்பை காலை, மதியம் இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.

👉 வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு இருக்கிறது.

👉 உப்புப் போட்ட நீரில் முட்டைகளை 15 நிமிடங்கள் வேக வைத்தெடுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்துவிட்டு பிறகு சமைக்கலாம். குளிர்ந்த நீரில் போட்டு வைப்பதால் முட்டையை தோலுரிக்க சுலபமாக இருக்கும்.

👉 இறாலை கழுவும் போது கையில் தண்ணீர் வடிந்து கொண்டே இருப்பதை தவிர்க்க, நியுஸ் பேப்பரை விரித்து அதில் வைத்து கொள்ளுங்கள். கையில் உப்பு, எண்ணெய் தேய்த்து கொண்டால் இறால் வாசனை கையில் அதிகமாக ஒட்டாது.

👉 சிக்கன் பொரிக்கும் முன்பே கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கனிலும் அந்த வாசம் நன்றாக இருக்கும்.

👉 வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம்.



👉 தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும்.

No comments:

Post a Comment

Please Comment