சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Sunday, May 17, 2020

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது 

 சென்னை 

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை நாளை (மே 18) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

 இதற்கிடையே தேர்வுக்கால அட்டவணை மே 16-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித் திருந்தது. ஆனால், சிபிஎஸ்இ இணையதளத்தில் இதுகுறித்து நேற்று எந்த அறிவிப்பும் வெளி யாகவில்லை. 

இதனால் தேர்வுக் கால அட்டவணையை எதிர்பார்த் திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

 ட்விட்டரில் தகவல் 

 இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை நாளை (மே 18) வெளியிடப்படும். சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் ட்விட்டரில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment