Ven Pongal: வெண் பொங்கலின் முக்கியத்துவம் - மறக்காம எப்படி செய்யணும்னு கத்துக்கோங்க! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Ven Pongal: வெண் பொங்கலின் முக்கியத்துவம் - மறக்காம எப்படி செய்யணும்னு கத்துக்கோங்க!

Ven Pongal: வெண் பொங்கலின் முக்கியத்துவம் - மறக்காம எப்படி செய்யணும்னு கத்துக்கோங்க!
How to prepare Ven Pongal: வெண் பொங்கல், உணவு மட்டுமா… மருந்து! ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவில் ஊட்டம் அளித்து, எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். 

ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. 

பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயறையும் பயன்படுத்தலாம். தமிழகத்தை விஞ்சும் வெளிநாட்டு பொங்கல் - மண் பாசத்துல நம்மள மிஞ்சிடுவாங்களோ!! வெண் பொங்கலில் மிளகு சேர்க்கும்போது கவனிக்க..! 

தூளாக்கி விற்கப்படும் மிளகு, காரம் தரும். ஆனால், நீண்ட நாட்கள் பொடித்து வைக்கப்பட்ட மிளகும், நீண்ட நாட்கள் சேகரித்து வைக்கப்பட்ட மிளகும், தன்னுள் உள்ள மருத்துவ ஆல்கலாய்டுகளையும் நறுமணச் சத்துகளையும் இழக்க ஆரம்பித்துவிடும். 

குறுமிளகை அவ்வப்போது தூளாக்கிப் புதிதாகப் பயன்படுத்துவதுதான் சளியை நீக்க, இரைப்பு நோயில் மூச்சிரைப்பைக் குறைக்க, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க… எனப் பல வகைகளில் உதவிடும். வெண் பொங்கல் தயார் செய்வது எப்படி? பொன்னி அரிசி - கால்கிலோ பாசிப்பருப்பு பருப்பு - 100 கிராம் இஞ்சி, பூண்டு நறுக்கியது - 2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சீரகம் - 1 டீ ஸ்பூன் மிளகு - 1 டீ ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது

முந்திரிப்பருப்பு - 10 உப்பு - தேவைக்கேற்ப வெண்பொங்கல் செய்முறை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும். நன்றாகக் கழுவி விட்டு மூன்று மடங்கு தண்ணீரைச் சேர்க்கவும். 

அத்துடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு, உப்பு, பெருங்காயத்தூளையும் சேர்த்து, குக்கரில் வைத்து 3 முதல் 4 விசில் வரும் வரை குழைய வேகவிடவும். குக்கரின் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, ஒரு கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.

ஒரு சிறு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும், முந்திரிப் பருப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ளப் பொங்கலில் கொட்டவும். நன்றாக கிளறினால் சுவையான பொங்கல் தயார்.


Ven Pongal: The Importance of White Pongal - Learn How to Prepare 

Ven Pongal: How to prepare Ven Pongal Drugs are of paramount importance in feeding and lifting weights for people with HIV. It is a pongal, a weight-lifting treat, not just for the patient, but for all the nongsans. 

But in the absence of physical labor, there is no substitute for the paparazzi white pongal as a pipe. Therefore, it is best to use sugar or veggies instead of bacon. Instead of almonds, you can use broken, unsalted moss. Foreign Pongal to surpass Tamil Nadu - Soil affection When you add pepper in white pongal ..


Pepper, which is sold as a powder, gives a spice. But long-lasting powders and long-lasting peppers will start to lose the natural alkaloids and aromatics. Frequent use of a mild spray can help to eliminate mucus, reduce wheezing in the gastrointestinal tract, and increase immunity. 

How to prepare white pongal Bonnie Rice - Calico Molasses - 100 g Ginger, Garlic Chop - 2 teaspoons Potatoes - A pinch of cumin - 1 Tbsp pepper - 1 Tbsp ghee - 1 tablespoon curry - Lightly grapefruit - 10 Whisk Mix both together and soak for 20 minutes. Wash well and add three times more water. 

Add the chopped ginger, garlic, salt and parsley and put in the cooker and cook for 3 to 4 whistles. Once the spirit of the cooker is contained, open the lid and whisk well with a spoon. Heat the ghee in a small skillet, add the cashew nuts, powdered pepper, cumin, curry leaves and saut,. Prepare delicious pongal by stirring well.

No comments:

Post a Comment

Please Comment