FASTAG கட்டண முறை 15-ம் தேதிமுதல் கட்டாயம் - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

FASTAG கட்டண முறை 15-ம் தேதிமுதல் கட்டாயம்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் FASTAG கட்டண முறை 15-ம் தேதிமுதல் கட்டாயம் 

தலா ஒரு பாதையில் மட்டுமே பணம் செலுத்தி செல்ல அனுமதி 

நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் FASTAG கட்டண முறை வரும் 15-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. இருப் பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடி யிலும் தலா ஒரு பாதையில் மட்டும் பணம் செலுத்தி பய ணம் செய்ய அனுமதி அளிக்கப் படும். சுங்கச்சாவடிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதைக் குறைக்கவும், வாகனங்கள் திருட்டு, சட்டவிரோத பொருள் கடத்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் பாஸ்டேக் (FASTag - மின்னணு கட்டணம்) முறையை மத்திய போக்குவரத்து அமைச்ச கம் கொண்டு வந்துள்ளது. 

இந்த கட்டண முறையை கட்டாயமாக்கு வதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், பரனூர் உள்ளிட்ட சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்கி கெடு பிடி செய்வதால், நீண்ட தூரத் துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். 

இதேபோல், பாஸ்டேக் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்ப தாகவும் புகார்கள் எழுந்துள்ளன. வாகன ஓட்டிகள் புகார் சில சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் அட்டைகள் இருப்பு இல்லை. கட்டணத் தொகை பிடித்தம் தொடர்பான விபரங்களுக்கான எஸ்எம்எஸ் தாமதமாக வருகிறது. சில நேரங்களில் எஸ்எம்எஸ் வருவதே இல்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, பாஸ்டேக் கட் டண முறை, வரும் 15-ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது. 

 இதுதொடர்பாக தேசிய நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ் டேக் (மின்னணு கட்டணம் வசூல்) முறையை படிப்படியாக கட்டாயமாக்கி வருகிறோம். தற் போதுள்ள நிலவரப்படி, மொத்த சுங்கச்சாவடி கட்டண வசூலில் 45 சதவீதம் பாஸ்டேக் முறையில் வரத் தொடங்கியுள்ளது. 10 விநாடிகளில் கடக்கலாம் பாஸ்டேக் அட்டை தொடர் பாக சில இடங்களில் எழுந் துள்ள தொழில்நுட்ப புகார் களை உடனுக்குடன் சரி செய்து வருகிறோம். 

பாஸ்டேக் அட் டையைப் பயன்படுத்தும்போது 10 விநாடிகளில் சுங்கச்சாவ டியைக் கடந்து செல்லலாம். வாகன ஓட்டிகள், வாகன உரி மையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 15 நாட்களுக்கு கால அவ காசம் அளிக்கப்பட்டது. இதற் கிடையே, வரும் 15-ம் தேதி முதல் பாஸ்டேக் முறையை கட்டாய மாக்கவுள்ளோம். இருப்பினும், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தலா ஒரு பாதையில் மட்டும் பணம் செலுத்தி பயன்படுத்தும் முறையை அனுமதிக்கவுள்ளோம். மற்ற பாதைகளில் பாஸ்டேக் பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படும். இந்த பாதையில் பணம் கொடுத்து பயணம் செய்தால் சுங்கக் கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும்” என்றனர்.

The FASTAG tariff system is mandatory from 15 on tariffs around the countryPermission to pay only on one track The FASTAG tariff system will be made compulsory from the 15th of  at all customs across the country. 

Both will be allowed to travel in each and every tariff on a single track. The Federal Transport Ministry has introduced the FASTag (Electronic Payment) system to reduce traffic congestion and prevent incidents of vehicle theft and smuggling. 

The National Highway Department is intensifying this tariff system. However, some customs, including Paranur, have long-haul vehicles lining up forcibly forcing the passive card. As a result, motorists suffer from traffic congestion. Similarly, there have been complaints of various artifacts in the FASTAG program. Motorists complain that some tariffs do not have pass tag cards. SMS for payment related details is delayed. 

Motorists complain that sometimes SMS is not coming. In the meantime, the FASTAG cutoff system is mandatory on the 15th. National Highway Department officials said, “We are gradually mandating the pass-through (tariff) system in all over the country. As of now, 45 percent of the total customs duty collection has started to come in the form of a FASTAG. Pass in 10 seconds We've been correcting some of the technical complaints arising in some parts of the FASTAG card series. 

When using FASTAG attests, you can cross the customs line in 10 seconds. At the request of motorists and motorists, they were given a 15-day notice. In addition, we have to make the FASTAG system mandatory from the 15th. However, we will only allow one customs payment at each tariff. Other vehicles will only be permitted to have passcode. Customers will be charged twice the rate if they travel on this route. There will be a one-off fine. ”

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .