``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல!"- மருத்துவர் கு.சிவராமன் - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல!"- மருத்துவர் கு.சிவராமன்

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

``சித்த மருத்துவம் வெறும் மூலிகை மருத்துவமல்ல!"- மருத்துவர் கு.சிவராமன்

மனித இனம் பெற்ற அறிவுத்திறனில் முக்கியமானது மருத்துவ அறிவு. பிற அறிவுகள் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவற்றைப் பற்றி ஆராய்ந்து பெற்றவை. மருத்துவ அறிவு மனிதன் தன்னைப்பற்றி ஆராய்ந்து கண்டது.உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. 

தமிழர்களுக்கான தனித்துவமிக்க, சிறப்புமிக்க மருத்துவ முறைதான் சித்த மருத்துவம். பண்டைய இலக்கியங்களில் இலைமறைகாயாகப் பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அது, சித்த மருத்துவத்தின் தொன்மையை உணர்த்தும். 

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் இந்த தினம் கொண்டாடப்படும். 

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி கொண்டாடப்படுகிறது.மக்களிடையே சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இம்மருத்துவத்தை தொடர்ந்து பின்பற்றச் செய்வதும்தான் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம். 

சித்த மருத்துவ தினம் குறித்து பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறும்போது, ``ஒரு துறை வளர வேண்டுமானால் அத்துறையைச் சார்ந்த கல்வியாளர்கள், தொழில்முனைவோர், அத்துறையில் ஆராய்ச்சி செய்வோர் ஆகியோர் ஓரிடத்தில் கூடிக் கலந்துரையாடுவது அவசியம். 


அதுபோன்ற கலந்துரையாடல்கள்தான் துறையின் வளர்ச்சிக்கும் சமூகத்தில் அத்துறையை எளிதில்கொண்டு சேர்க்கவும் உதவும். சமூகத்தில் சித்த மருத்துவத்தை ஒரு மூலிகை மருத்துவமாக எடுத்துச் செல்வதைக்காட்டிலும், வாழ்வியல்முறைகளைக் கூறும் மருத்துவமாக எடுத்துச் செல்வதுதான் சிறப்பானதாக இருக்கும். 

சித்த மருத்துவ மாணவர்கள், சித்த மருத்துவம் மட்டுமே பயிலாது சித்த மருத்துவம் சார்ந்த பிற துறை அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள், படிக்கும் காலத்திலிருந்தே சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, பிற்காலத்தில் பெரிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்" என்றார்.


`` Siddha medicine is not just herbal medicine! "- Doctor Q. Sivaraman specially 


Celebrating Siddha Medicine Day is a celebration of paranoia among the masses. If you want to grow a Turaiyaic based academics, entrepreneurs and research workers in the field to discuss the need to gather in one place. 

Such discussions will facilitate the growth of the sector and facilitate inclusion in the community. It would be better to take paranoia as a herbal medicine rather than a herbal medicine in society. 

Students of paranoia should not only learn paranoia but also develop other field of paranormal knowledge. Students should prepare themselves to undertake paranormal research during the course of study. That, in turn, will lead to greater research. ”

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .