விமானங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவதில்லை - ஏன் தெரியுமா..? அடேங்கப்பா இதுல இவ்ளோ விசயம் இருக்கா..! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

விமானங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவதில்லை - ஏன் தெரியுமா..? அடேங்கப்பா இதுல இவ்ளோ விசயம் இருக்கா..!

விமானங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவதில்லை - ஏன் தெரியுமா..? அடேங்கப்பா இதுல இவ்ளோ விசயம் இருக்கா..!விமானங்களில் இலவச வைஃபை வசதி ஏன் வழங்கப்படுவதில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. விமானங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவதில்லை... ஏன் தெரியுமா..? அடேங்கப்பா இதுல இவ்ளோ விசயம் அடங்கியிருக்கா!!! விமான போக்குவரத்துத்துறை நாளுக்கு புதிய வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றது. 

பேருந்தில் பயணிப்பதைப் போன்று விமானத்தில் பயணிப்பதும் சர்வசாதாரணமாக விட்டது. இருப்பினும், ஒரு சிலர் வாழ்க்கையில் இது எட்டாக் கனியாகவே இருக்கின்றது. விமான பயணம் சாகச ரைடுகளில் செல்வதைப் போன்ற அலாதியான உணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. 

அதுமட்டுமின்றி, இலக்கை மிக விரைவில் அடைவதற்கு வான் வழி பயணமே மிக உகந்ததுவிமானங்களில் இலவச வைஃபை வசதி வழங்குவதில்லை... ஏன் தெரியுமா..? அடேங்கப்பா இதுல இவ்ளோ விசயம் அடங்கியிருக்கா!!!

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களில் வான் வழி (விமான) பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர் மக்கள். இதனால், இந்த துறை நாளுக்கு நாள் அசூர வளர்ச்சியை அடைந்து வருகின்றது. 

இதனால், விமானத்துறையை அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்திற்கு கொண்டு செல்வதற்கான முனைப்பில், அதைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, 

ரயில் பெட்டிகளில் நீண்ட பயணத்திற்கு உதவுகின்ற வகையில் இருக்கும் படுக்கையறை வசதியைப் போன்று விமானங்களிலும் படுக்கையறை வசதி கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், ஜெட் விமானங்களுக்கு டஃப் கொடுக்கின்ற வகையிலான மேம்பாட்டை வழங்குவதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு, பல்வேறு அதிரடி தொழில்நுட்ப மாற்றங்களைப் பெற்று வரும் விமானங்களில் ஒரு சில சாதாரண வசதி இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பற்றாக்குறையாக காட்சியளிக்கின்றது.

முக்கியமாக, விமானங்களில் இலவச வைஃபை இல்லாதது பயணிகளுக்கு பெரும் கவலை அளிக்கக்கூடிய விசயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில், எல்லா இடங்களிலும் வைஃபை வசதிகள் உள்ளது. 

குறிப்பாக பேருந்து நிலையும், ரயில் நிலையம், மால்கள், காஃபி ஷாப்கள், முடி வெட்டும் இடம் என பல்வேறு இடங்களில் வைஃபை வசதி இருக்கின்றது.இதனால், நாம் எப்போதும் உலகத்துடன் ஒன்றிணைந்திருக்கின்றோம். 

ஆனால், விமானத்தில் இந்த வசதி இல்லாததால் நாம் உலகத்தில் இருந்து தனித்துவிடுவதைப் போன்று உணரப்படுகின்றது.மேலும், விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும்போது இணையத்தையே மையமாகக் கொண்டு பணிபுரியும் நபர்களால் எந்தவொரு பணியும் செய்ய முடிவதில்லை. 

தொடர்ந்து, நாட்டு நடப்பு விவரம் (செய்தி) போன்றவற்றை தெரிந்துக்கொள்வதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. ஆகையால், இதுமிகப்பெரிய தடையாகவே பார்க்கப்படுகின்றது. விமானத்தில் இத்தகைய குறைபாடு நிலவ பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

அவற்றைதான் நாம் கீழே பார்க்கவிருக்கின்றோம்.பொதுவாக, வைஃபை ரூட்டர்கள் கம்பியில்லா இணைய சேவை வழங்கியாக இருந்தாலும், அதற்கான இணைப்பு டவர்கள் மூலமாக கம்பிகளின் வழியே கிடைக்கின்றன. 

ஆகையால், 35 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் விமானத்தில் இத்தகைய இணைப்பை வழங்குவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, கம்பியில்லா மோடம் மூலமாக இணைப்பைப் பெறுவது மட்டுமே ஒரே வழி. இது ஏடிஜி என்ற தொழில்நுட்பத்தின் மூலமே சாத்தியம்.

இது விமானத்தின் வயிறு மற்றும் மேற்புறப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ரிசீவர் நேரடியாக செல்போன் டவர்களுடன் தொடர்பு கொண்டு பயணிகளுக்கு தடையில்லை இணைய வசதியையும் வழங்கும். 

ஆனால், கடல் பரப்பில் செல்போன் டவர்கள் இல்லாத காரணத்தால் இணைப்பில் சிக்கல் ஏற்படுகின்றதுஅந்த நேரத்தில், இந்த ரிசீவர்கள் நேரடியாக சேட்டலைட்டுடன் தொடர்பு கொண்டு சேவையை வழங்கும். இது செல்போன் டவர்மூலம் கிடைக்கும் வேகத்தைவிட அதிக வேகத்திலான இணைய வசதியை வழங்கும்.

இந்த செயலானது தன்னிச்சையாக செயல்படும். இந்த அதீத சிறப்பு தொழில்நுட்பம் பொருந்திய ஏடிஜி ரிசீவர் விமானத்தின் மேற் மற்றும் அடிப்பகுதியில் பொருத்தப்படுவதால், விமானத்தின் எடை சற்றே கூடுகின்றது. ஆகையால், அது பறக்கும்போது பின்னோக்கி இழுக்கும் விசை அதிகரிக்கின்றது. 

இதனால், விமானத்திற்கு கூடுதல் எரிபொருள் செலவாகிறது.மேலும், இந்த கருவியின் விலையும் சற்று கூடுதலாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த செலவீணங்கள் அனைத்தும் பயணிகளின் டிக்கெட் தொகையில் வந்து விழும். இது, டிக்கெட்டின் விலையை அதிகரிக்கச் செய்வதுடன், மக்களை விமானம் பக்கம் திரும்ப முடியாமல் செய்துவிடும்.

ஆகையால், விமான நிறுவனங்கள் இலவச வைஃபை வசதியைக் கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும், ஜெட் ப்ளூ விமான போக்குவரத்து நிறுவனம் அதன் உள்நாட்டு சேவையில் இலவச வைஃபை சேவையை வழங்கி வருகின்றது. 

இதனை கடந்த 2017ம் ஆண்டிலிருந்தே அந்நிறுவனம் வழங்கி வருகின்றது. இதைத்தொடர்ந்து, தற்போது டெல்டா என்ற நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வைஃபை வசதியை வழங்குவதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ளது.

விமானங்களில் இத்தகைய சேவை வழங்கப்படாத காரணத்தால், பலர் தங்களின் நீண்ட தூர பயணத்தின்போது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து மகிழ்ச்சியுறுவது மற்றும் புத்தகங்களைப் படிப்பது போன்ற செயல்பாட்டில் களமிறங்கியதாக, முன்னதாக பயணித்தவர்களில் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment