போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!


பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு 

நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை "போக்கி" என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி "போகி" என்றானது. 

இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.போகியன்று நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. 

அதனால்தான், அவர்களுக்குப் பிடித்த உணவை வகைகளை படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும். இந்திரனுக்கு 'போகி' என்றொரு பேரு இருக்கு. 

இந்திரன் மழைக்குரிய கடவுளா நம் புராணங்கள் சொல்லுது. அதனால, அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என மக்கள் நம்பினர். நீரின்றி அமையாது உலகுங்குறதால, உலக இயக்கத்துக்கு முக்கிய காரணியான வருணபகவானுக்கு முதல் நாள் நன்றி சொல்லி கொண்டாடுகின்றனர். 

பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பித்துவிடும். வீட்டை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து வாங்கி வருவதுன்னு சகலரும் பிசியா இருப்பாங்க. 

விவசாயிகள் விளைப்பொருட்களின் அறுவடையிலும், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்வோர், நகை செய்வோர்ன்னு சகலரும் தங்கள் தொழிலை கூடுதல் நேரமெடுத்து செய்வதால் அவர்கள் தங்கள் உடைகளில் அதிக கவனம் கொள்ளமாட்டார்கள். 

விவசாய வேலைகளிலும், மண்பாண்ட தொழிலிலும் இருப்போர் உடைகள் சேறும் சகதியாய் அழுக்காய் இருக்கும். அறுவடை காலங்குறதால, புது உடை வாங்க நேரமிருக்காது. அதனால், தங்கள் வேலை முடிஞ்சது, அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். 

அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது. 


போகி பண்டிகை கொண்டாடும் வழக்கம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, வடநாடுகளிலும் கொண்டாடப்படுது. அன்றைய தினத்தில் வாசலில் வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூவை சொருகி வைப்பர். 

வைகறையில் 'நிலைப்பொங்கல்' வைப்பாங்க. வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றை நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வீட்டு தெய்வத்தை வணங்குவர். 

இதை வீட்டின் மூத்த சுமங்கலி பெண்கள் நடத்துவார். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் செய்து படைப்பாங்க. ஒருசிலர் போகி அன்று இறந்தவர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல், கருவாட்டு குழம்பு வைத்தும் வழிபடுவாங்க. 

போகி எரிக்கும்போதும், நிலைப்பொங்கல் வைக்கும்போதும் சிறுவர்கள் பறை மாதிரியான மேளத்தை அடிப்பாங்க.பழைய பொருட்களை எரிக்குறேன்னு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்ன்னு எரிச்சு சுற்றுச்சூழலை 

மாசுப்படுத்தாம இலை, காகிதம், பருத்தி துணிகள்ன்னு எரிச்சு பண்டிகையின் அர்த்தத்தையும், சுற்றுச்சூழலையும் காப்போம். தமிழ்மினிட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் போகி, பொங்கல் தின வாழ்த்துகள்.


Do you know the meaning of Bogi festival ?!


Bogey is celebrated on the first day of Pongal and is regarded as a day of renewal. This is the day to leave the old and the useless. In ignorance, lying, jealousy, lust, anger, and sadness, the symbol of turning away from our evil qualities and becoming a new person, the fire of unwanted things in the house is called "Bogi". 

It is our ancestors' belief that homelessness will dissipate. Shastra says that our ancestors visited our home as soon as possible. That is why they should create their favorite dishes and worship them with coconut, betel nut, banana, banana and Buddha. 

Indran has a name called 'Bogey'. Our legends say that the rain god of Indra. Therefore, people believed that if he gave way, it would rain and the crops would flourish. The first day, thanks to Varunapagavan, the main cause of the global movement. 

Pongal celebrations are not just three days, but the preparations for it begin immediately. Cleaning the house, chalking it up, picking up cloths, and sewing it all in. Farmers harvest their produce, weavers, pottery makers, jewelers, and so on. 

People who work in agriculture and pottery are dirty and dirty. When the harvest is over, it may not be time to buy a new dress. So they finished their work and burned the old clothes. At that time the number of dresses would not be much. 

Also, if women continue to wear dirty old clothes, the baby will be delayed. So it was customary to burn old clothes and wear a new one. The festival of Poki is celebrated in Tamil Nadu, Andhra Pradesh, Telangana and North India. Plug the vape, flower, avocado on the door that day. Vaiyangara 'Standing Pong'. 

The front door of the house is decorated with turmeric, saffron, dollop of cane, banana, betel, dagger, saffron, coconut and worship the deity. The house will be hosted by senior Sumangali women. During the Pokip Festival, mock, waddle, payasam and be creative. 

Sugar pongal, ovarian broth worshiped in memory of those who died on a few bogey. The boys will be able to take the same kind of dessert as they burn and stand up. Poki, Pongal Day Greetings to all TamilMinites readers.

No comments:

Post a Comment

Please Comment