செயல் திறன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

செயல் திறன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி

செயல் திறன் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறைகளில், 16 வகையான செயல் திறன்கள் அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

அரசு பணிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வாய்ப்புகளை உறுதி செய்ய, மத்திய - மாநில அரசுகள், நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய பணியிடங்களை உருவாக்குவது, பணியாளர் தேர்வு ஆகியவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் கீழ் வரும் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், ஆணையங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, வரையறுக்க வேண்டும் என, மத்திய அதிகார பகிர்வு மற்றும் சமூக நீதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தெந்த பணியிடங்கள் ஏற்றதாக இருக்கும் என்பதில், பழைய வழிமுறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக, அரசு பணியிடங்களை, 

செயல் திறன் அடிப்படையில் வகைப்படுத்தி, அதில், எந்தெந்த பணியிடங்கள், எத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை வரையறுக்க பரிந்துரை செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை வரையறுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதில், பார்த்தல், கேட்டல், கவனித்தல், படித்தல், எழுதுதல், நடப்பது என, 16 வகையான செயல் திறன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

இந்த செயல் திறன்கள் அடிப்படையில், பணியிடங்கள் வகைப்படுத்தப்பட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். இதற்கான பணிகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை இறுதி செய்துள்ளது. 

இந்த அணுகுமுறையை அனைத்து துறைகளும் கடைப்பிடிக்க, மத்திய அரசு அறிவுறுத்தல்களை அனுப்பி வருகிறது. விரைவில், தமிழக அரசு பணியிடங்களும், செயல் திறன் அடிப்படையில் வகைப் படுத்தப்பட உள்ளன.Functional work for the differently abled

Performance criteria for people with disabilities panimattiya Housing and Urban Affairs under the Ministry of operation fields, 16 kinds active in terms of capacity, for people with disabilities in workplaces definition ceyyappattullanaaracu works, for people with disabilities the opportunity to make sure the federal - state governments, measures have been taken . 

New jobs creation, Recruitment in, for people with disabilities opportunities valankappatukinranainnilai, the federal government under the departments, public sector organizations, authorities, and people with disabilities to the workplace and to discover and to define as the central power-sharing and social justice ministry ordered pirappittullatumarrut disabilities 

In what would be the ideal workplace, follow the old methods. Alternatively, it is recommended to classify government workplaces on the basis of efficiency, and to define which workplaces are appropriate for those with different skills. 

Based on this, there are 16 types of functional skills listed, such as viewing, listening, listening, reading, writing, performing. Allocate to the talented Ppatum. The work has been finalized by the Department of Housing and Urban Development. 

The Central Government has been sending instructions to all departments to adopt this approach. Soon, Tamil Nadu government workplaces will be classified as functional.

No comments:

Post a Comment

Please Comment