நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து...!! - துளிர்கல்வி

Latest



துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, January 14, 2020

நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து...!!

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்து...!! 




வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதை சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பீட்ஸா, 

பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகள், கார்பன்-டை-ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள். 

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு காண்போம். நொறுக்கு தீனியின் தீமைகள் : பீட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், ஐஸ்கிரீம், எண்ணெயில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ் இவையெல்லாம் நொறுக்கு தீனிகளாகும். 

இதுதான் இன்றைய இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடாகும். ஒவ்வொரு உணவுக்கும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமென்று விதிமுறை இருக்கின்றது. நமது ஆரோக்கியத்திற்கு மைதா நல்லதல்ல. ஏனெனில், இது நமது உடலுக்கு சக்தியைத் தராமல் செரிமானமாக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக்கொள்கிறது. 

எனவே முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவதுதான் நல்லது. நொறுக்கு தீனி பொருட்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருப்பதற்கு சேர்க்கும் பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது. 

சாலையோர உணவு கடைகளில் வேகவைத்த உருளைக்கிழங்குகளையும், நறுக்கிய வெங்காயத்தையும் திறந்த வெளியில் வைத்திருப்பார்கள். இதனால் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. இவற்றால் வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 



பாஸ்ட் புட், நொறுக்கு தீனியை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படும். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. 

இல்லையென்றால் மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக செரிமானம் செய்ய பித்த நீர், கணைய நீர் தேவை. இது குறைந்தால் செரிமானம் ஆகாமல் இருக்கும். இவையெல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவைப் பொறுத்துதான் உள்ளது. 

இல்லையென்றால் செரிமானம், வாயுகோளாறு, வயிற்றுப்புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்றுநோய், மூலம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, மாரடைப்பு, மஞ்சள் காமாலை, அதிகபட்சமாக புற்றுநோய் கூட வர வாய்ப்பு இருக்கிறது. 

அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்கு காரணமாகும்.


Are you the one who eats crunchy food? Risk ... !! 

What do we eat for those who fly to work? How do we eat? Spend days drinking chips, noodles, pizza, burgers, oil-fried foods, and carbon-dioxide-containing chemical drinks, which are sold in packets without knowing. 

Here we will talk about the consequences. Disadvantages of Crusher Foods: Pizza, Burger, French Price, Ice Cream, Oil Bread Chicken, Chips are all shatter fodder. This is the half-time meal for today's younger generation. This is the norm for every meal to be eaten. 

Maida is not good for our health. This is because it takes energy away from our body to digest it without giving it energy. So it's best to grind whole wheat. Ammonia is also added to the ingredients to make the crunchy dishes not tasty and tasteless. It can bring about cancer. 

At the roadside food store, they keep baked potatoes and chopped onions out in the open. This makes it more susceptible to microbes in the air. These can cause vomiting and panic problems. People who eat past foot and crunchy food will have digestive problems. 


When they get up in the morning, they will have unleavened mumps and chest burns. It is advisable to consult a specialist for bowel disease immediately. Otherwise there is a risk of heart attack and cancer. You need bile and pancreatic water for digestion in general. It will not be digested. 

It all depends on what we eat. Otherwise, digestion, gas, diarrhea, chest irritation, ulcer, gall bladder, colon cancer, diabetes, hypertension, cholesterol, heart attack, jaundice, maximum cancer are also likely. Tandoori lovers too have this opportunity. This is because it is directly consumed by fire.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .