டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்தே இனி டிக்கெட் வாங்கலாம்.! புதிய வசதி அறிமுகம்.! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்தே இனி டிக்கெட் வாங்கலாம்.! புதிய வசதி அறிமுகம்.!

டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்தே இனி டிக்கெட் வாங்கலாம்.! புதிய வசதி அறிமுகம்.!


டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் 

இந்த பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பொது மக்கள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். 

இது மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், 

ஒரு மாதத்திற்கு, ஏறத்தாழ 2 லட்சத்து, 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை வாங்கி செல்கின்றனர்.அப்படி மாதம் மாதம் பயணச் சலுகை அட்டை வாங்கும் பொதுமக்களின் நலன் கருதி, 

மின்னனு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரத்தில் போக்குவரத்துக் கழக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இனிமேல் பயணிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.


You can buy tickets now with debit and credit cards. Introducing the new facility.! 

The City of Chennai Municipal Transport Corporation has introduced a bus ticket for debit and credit cards. Located at the Chennai Metropolitan Transport Corporation, the general public can purchase their tickets using their debit and credit cards. 

According to a press release issued by Municipal Transport Corporation Managing Director K Ganesan, the Municipal Transport Corporation operates monthly travel concession cards at approximately 2 lakhs and 61 thousand passengers per month. 

Offer card In the interest of the buying public, the Sweeping Machine has been facilitated in 29 sales centers in the Northern and Southern regions of the Transport Corporation in Chennai. 

Now, travelers can use their debit and credit cards to avail travel concession cards at all the Municipal Transport Corporation of Chennai.

No comments:

Post a Comment

Please Comment