தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் சில கீரைகளின் பங்கு...? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் சில கீரைகளின் பங்கு...?

தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் சில கீரைகளின் பங்கு...?


சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். 

சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். 

சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். 

உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். 

அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். 

சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 

உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். 

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


The role of some greens in solving thyroid problems ... 


Some women have low thyroid gland after childbirth. After the baby is born, the body becomes bulky and the face becomes bulky. Swelling in the hands and swelling in the neck. Arms, legs ache, arthritis, memory loss, and depression. 

For some, the voice changes. Pain when swallowing saliva. The skin looks dry and luscious. Fetal eggs do not develop properly. Obesity prevents childbirth. Iodine and selenium are important if the thyroid gland is to function properly. 

Selenium-rich foods such as meat, fish, mushrooms, soybeans and sunflower seeds are also essential. It is good to add spinach, sesame and garlic in your diet. You should only take salt with iodine in your diet. Take only 4 to 5 grams of salt daily. 

Eat spinach. When boiling them you can use water to drain. Whole grains and sprouted legumes can be added to the diet. Fruit juices are also suitable for the body. Eat more foods that are nutritious. 

Treatment: People who suffer from thyroid throat problems can be treated with an equal dose of acetaminophen, lime, and black pepper and eat two grams daily.

In case of physical exhaustion, the achilles powder can be used to burn the smoke. Drinking asoka bark in water and drinking three spoonfuls a day is a great bleeding problem for women. 

Drinking 30 ml of ambassador spinach daily in the morning will dissolve excess fat in the body. If you grind the thumb leaf and tie it on the neck, it will heal.

No comments:

Post a Comment

Please Comment