ஆயுர்வேத முறையில் ஆயில் புல்லிங் செய்வது எப்படி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

ஆயுர்வேத முறையில் ஆயில் புல்லிங் செய்வது எப்படி

ஆயுர்வேத முறையில் ஆயில் புல்லிங் செய்வது எப்படி 

ஆயில் புல்லிங் ஆயில் புல்லிங் என்ற வார்த்தையை, சமீபகாலமாக அதிகமான விளம்பரங்களில் நாம் கேட்டிருப்போம். நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கொப்பளிக்கும் முறையைத்தான் ஆயில் புல்லிங் என்று கூறுகிறார்கள். 

இந்த முறையானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆயுர்வேத மருத்துவத்தில் நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இடையில் இந்த பழக்கம் முற்றிலுமாக மறக்கப்பட்டு சமீபகாலமாக வழக்கத்திற்க்கு வந்துள்ளது. 

இந்த ஆயில் புல்லிங் செய்வதால் நமக்கு என்னென்ன பயன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போமா. . ஒற்றைத் தலைவலி ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் ஆயில் புல்லிங்கை தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் சிறந்த தீர்வு கிடைக்கும். -

வாய் பிரச்சனைகள் தீரும் ஆயில் புல்லிங் தொடர்ந்து செய்வதன் மூலம் வாயில் ஏற்படும் துர்நாற்றம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு, பற்களின் பழுப்பு தன்மை, இவைகள் நீங்கி வாய் சுத்தப்படுத்தப்படுகிறது. 

உடல்சூடு குறையும் உடலில் அதிகப்படியான பித்தம் உடையவர்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். சூட்டினால் இவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். உடலில் உள்ள பித்தம் குறைந்து, சூடு தணிந்து குளிர்ச்சியான நிலையைப் பெற ஆயில் புல்லிங் செய்வது நல்லது. 

உற்சாகம் அதிகரிக்க சிலர் எப்பொழுதும் சுறுசுறுப்பு இல்லாமல் சோர்வாகவே காணப்படுவார்கள். இதனால் இவர்களது அன்றாட பணியினை வேகமாக செயல்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சோம்பேறித்தனம் உள்ளவர்களுக்கு ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

பகல் பொழுதில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்பவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும் என்பதும் உண்மை. பார்வைத் திறன் அதிகரிக்க நல்லெண்ணெய்யின் குளிர்ச்சியால் நம் கண்களில் உள்ள நரம்புகள் சீராக இயங்குகிறது. 

இதன் மூலம் கண் பிரச்சனையானது தீர்க்கப்படுகிறது. சுவாச பிரச்சனைகளை தடுக்கிறது வறட்டு இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சினை இவைகளுக்கெல்லாம் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. சரும பொலிவிற்கு ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படுகிறது.

இதன்மூலம் நம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும். மாதவிடாய் சீராக இருக்க சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக வராது. ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் நம் உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் சமநிலை படுத்த பட்டு மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் வருகிறது.

தைராய்டு தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்கப்பட்டு, தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது. மூட்டு பிரச்சனைகள் நீங்கும் மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் இவைகள் குறைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால் மூட்டு வலி வராமலும் தடுக்கலாம். 

இந்த பயன்களை எல்லாம் நாம் முழுமையாக அடைய வேண்டுமென்றால் ஆயில் புல்லிங் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்? ஆயில் புல்லிங் செய்யும் முறை காற்றோட்டமாக உள்ள இடத்தில் சூரிய வெளிச்சம் நம் மீது படும்படி அமர்ந்து கொள்ள வேண்டும். 

கழுத்து பகுதி, தோல் பகுதி இவைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி வாயின் எல்லா பாகங்களிலும் படும்படி சுழற்ற வேண்டும். வாயில் ஊற்றப்பட்ட எண்ணெயானது பசை போன்று வரும் வரை வைத்திருக்கலாம். 

அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் கசியும் வரை வைத்திருக்கலாம். இந்த ஆயில் புல்லிங்கை நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய், பால், பழச்சாறுகள், கோமியம் மற்றும் தேன் போன்ற பொருட்களாலும் கொப்பளிக்கலாம். 

ஆனால் நல்லெண்ணெய் தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நல்லெண்ணையை பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வாயில் வைத்திருந்து கொப்பளித்து துப்புவது நல்ல பலனை அளிக்கும். 

இந்த ஆயில் புல்லிங்கை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வருவதன் மூலம் நல்ல பலனை பெறலாம். ஆயில் புல்லிங் செய்து முடித்து சிறிது நேரம் கழித்து தான் காலை உணவு சாப்பிட வேண்டும்


How to Do Oil Pulling in Ayurveda


Oil Pulling We have heard the term Oil Pulling in more recent ads. Oil Pulling is the only method of keeping the oil in the mouth for a while.This method has been practiced by our forefathers in Ayurvedic medicine for over a thousand years. 


In the meantime, this practice has been completely forgotten and has become commonplace recently.In this post we will discuss in detail what the benefits of this oil pulling are to us. . 

Migraine Headaches Migraine Headaches are best done after 48 days of oil pulling. -Oily problems can be caused by repeated oily pulpings, mouth odor, gums bleeding, tooth decay, and cleansing the mouth.

People who have excessive bile in a decreased body are more likely to be overweight. They face many problems with the suit. Oil Bulling is good for decreasing body odor, keeping warm and cooling.

Some people will always look tired without being active. This makes them unable to carry out their daily tasks faster. Oil Pulling is a great solution for those who are lazy.

It is true that people who are active and active during the day can get a good night's sleep. The cooling of goodwill enhances the optic nerves in our eyes.

Thereby the eye problem is solved. Oil Bullying is an excellent remedy for dry cough, asthma, respiratory problems and kidney problems. Oil pulling to the skin is eliminated toxins in our body.

This will make our skin look bright. For some people, the menstrual cycle may not be steady. Oil Pulling is the perfect way to balance the hormones secreted by our body through the menstrual cycle.Thyroid Thyroid Hormone Regularly secreting thyroid hormone, people with thyroid problems regularly control the thyroid problem.

Relieving Joint Problems People who have arthritis have this oil pulping that reduces joint pain and swelling. Regular oil pulling can prevent joint pain.

If we want to fully achieve all these benefits, how do we know how to do Oil Pulling? Oil Pulling Method The sunlight should be sitting on us where the air is airy.

Apply hot water to the neck and skin area. Pour the oil into the mouth and rotate all parts of the mouth. The oil poured into the mouth can be kept in place until it becomes gluey.


Or you can keep the water through the eyes and nose until it leaks. This oil pulp can be flavored with coconut oil, milk, juices, komiyam and honey besides good oil.But goodwill is very special.


Spraying this goodwill in the mouth for ten to fifteen minutes will give good results.You can get good results by doing this oil pulping regularly for 48 days. Eat breakfast only a short time after the oil is done

No comments:

Post a Comment

Please Comment