மீன் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு வாய்ப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

மீன் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு வாய்ப்பு

மீன் துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு வாய்ப்பு 

மோர்தானா மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு உதவியாளர் பணி யிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மோர்தானா மீன் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பதவிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். 

மீன் பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் இயக்குதல், அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன் துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு பொதுப் பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ள நபர்கள் வரும் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை மீன் துறை இணை இயக்குநர் (மண்டலம்), சென்னை அலுவலகம், டிஎம்எஸ் வளாகம் மூன்றாம்தளம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Opportunity for office assistant job in the fish industry

Eligible applicants can apply for two vacant assistant positions at the Mordana Fisheries Inspector's Office. According to a press release issued by Vellore district collector Shanmugasundaram, two vacancies of the fisheries assistant at the Mordana Fisheries Inspector's Office will be filled. 

This post should be known to read and write in Tamil. Swimmers should know. Must be familiar with fishing, netting, gift running, repairing broken nets. Preference will be given to those who have a certificate of training at any fishery training center run by the Department of Fisheries. 

For this task, the general public must be under 30 years of age. Tribes and tribes must be under 35 years of age. Interested persons should send their resumes by February 2 to the Joint Director of Fisheries (Zone), Chennai Office, DMS Campus Third Floor, Tenampet, Chennai-6.


No comments:

Post a Comment

Please Comment