சித்திரை தமிழ் புத்தாண்டு. திருவள்ளுவர். அண்ணா விருதுகள் பட்டியலை அறிவித்தது தமிழக அரசு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

சித்திரை தமிழ் புத்தாண்டு. திருவள்ளுவர். அண்ணா விருதுகள் பட்டியலை அறிவித்தது தமிழக அரசு

சித்திரை தமிழ் புத்தாண்டு. திருவள்ளுவர். அண்ணா விருதுகள் பட்டியலை அறிவித்தது தமிழக அரசு

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படும் தமிழ்த்தாய், உ.வே.சா., கபிலர், கம்பர் உள்ளிட்ட 15 விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2019-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறை செயலரால் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்று, அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது.  இதன்படி, தமிழ்த்தாய் விருது- சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்படுகிறது. இதே போல் கபிலர் விருது- புலவர் வெற்றியழகன், உ.வே.சா. விருது- வே.மகாதேவன், கம்பர் விருது- சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது- சிந்தனைக் கவிஞர் கவிதாசன், ஜி.யு.போப் விருது- மரிய ஜோசப் சேவியர், உமறுப்புலவர் விருது- லியாகத் அலிகான், இளங்கோவடிகள் விருது- கவிக்கோ ஞானச்செல்வன் என்ற கோ.திருஞானசம்பந்தன், அம்மா இலக்கிய விருது- உமையாள் முத்து ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 


 மேலும், சிங்காரவேலர் விருது- அசோகா சுப்பிரமணியன் என்ற சோ.கா.சுப்பிரமணியன், மறைமலையடிகளார் விருது- புலவர் ப.முத்துக்குமாரசாமி, அயோத்திதாசபண்டிதர் விருது- புலவர் வே.பிரபாகரன், முதல்வர் கணினித் தமிழ் விருது- த.நாகராசன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது சா.முகம்மது யூசுப், க.ஜ.மஸ்தான் அலி, பேராசிரியர் சிவ.முருகேசன், முனைவர் ந.கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, மருத்துவர் முருகுதுரை, மாலன் (எ) வே.நாராயணன், கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன், அ.மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 


 உலகத் தமிழ்ச்சங்க விருதுகளில் இலக்கிய விருது மலேசியாவைச் சேர்ந்த பெ.ராஜேந்திரன், இலக்கண விருது- பிரான்சை சேர்ந்த முத்து கஸ்தூரிபாய்க்கும் மொழியியல் விருது- இலங் கையைச் சேர்ந்த சுபதினி ரமேஷுக்கும் வழங்கப்பட உள்ளது. இவற்றில், கபிலர் விருது முதல் கணினித் தமிழ் விருது வரை பெறும் விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். தமிழ்த்தாய் விருதுக்கு ஒரு அமைப்புக்கு மட்டும் ரூ.5 லட்சம், நினைவுப் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். 

உலகத் தமிழ்ச்சங்க விருதுகளில் இலக்கிய, இலக்கண, மொழியியல் விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் தகுதியுரை, காசோலைப் பேழை, பொன்னாடை வழங்கப்படும். திருவள்ளுவர், அண்ணா விருது மேலும், இந்த 2020-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர், அண்ணா விருதுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளுவர் விருது- ந.நித்தியானந்த பாரதி, பேரறிஞர் அண்ணா விருது- கோ.சமரசம், பெருந்தலைவர் காமராசர் விருது- மா.சு.மதிவாணன், மகாகவி பாரதியார் விருது- ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது- த.தேனிசை செல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- சே.சுந்தரராசன், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- மருத்துவர் மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. 


 தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா வரும் ஜன.20-ம் தேதி நடைபெறு கிறது. இவ்விழாவில், சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் மற்றும் திருவள்ளுவர், அண்ணா விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.ஜன.20-ம் தேதி நடைபெறும் விழாவில், சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் மற்றும் திருவள்ளுவர், அண்ணா விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.

Tamil New Year. Thiruvalluvar. Anna awards list announced


The Government of Tamil Nadu has announced the recipients of 15 awards including Tamil Nadu, UVA, Kapillar and Kambar. On behalf of the Tamil Development Department of the Government of Tamil Nadu, the Tamil Nadu Government has accepted the recommendations of the Secretary of the Tamil Development Department for the 2019 Tamil Nadu Annual Awards. Accordingly, the Tamilthai Award is given to the Chicago Tamil Association. 


Similarly, the Kapillar Award - a scholarly achievement Award - V.Magadevan, Gamber Award - Saraswathi Ramanathan, Word of Life - Thinking poet Kavidasan, GU Bobp Award - Mary Joseph Xavier, Umaruppulavar Award - Liyakath Alikan, Young Bats Award - Kaviko Gnanadhachana Amma - is given to Umayyal Muthu. In addition, Singaravelar Award - Asoka Subramanian, SEP Subramanian, Archbishop's Award - Scholar P Muthukumaraswamy, Ayodhitha Das Panditar Award - Pulavar V Prabhakaran, CM Computer Tamil Award - T. Nagarasan. In addition, the best translator award was M Muhammed Yousuf, KJ Mastan Ali, Professor Shiva Murugesan, Doctoralist NKadikasalam, Jadin Mindan (Muttiah), Vatsala, Doctor Murukudurai, Malan (A) V Narayanan, Krisankini (A) Nagarasan and A. Mathivanan to be presented. The World Literary Awards Literary Award will be presented to Malaysia's B. Rajendran, Grammar Award - French Muthu Kasturi Baik and Linguistic Award - Sri Lanka's Subhadini Ramesh. The awardees will be awarded Rs 1 lakh, one pound gold medal, qualification and ponadai from the Kapillar Award to the Computer Tamil Award. An organization of the Tamil Nadu Award alone will be awarded Rs 5 lakh, souvenir, shield and certificate of appreciation. The Best Translator Award will be awarded to the winner of the award of Rs. 1 Lakh. 


Each of the recipients of literary, grammatical and linguistic awards at the World Tamil Awards will be awarded an amount of Rs. 1 Lakh. Thiruvalluvar and Anna Awards In addition, the Government of Tamil Nadu has announced the Tiruvalluvar and Anna awards for the year 2020. Accordingly, the Thiruvalluvar Award - Nithyananda Bharathi, Perariyar Anna Award - Co-Empowerment, Perumaliyavar Kamarasar Award - MC Mathivanan, Mahakavi Bharathiar Award - PC Sivaraji, Pavender Bharathidasan Award - Tennessee Chellappa, Tamil Ka. The award is presented to S. Sundararasaan, Muthamizhkaval KARV Viswanathan Award - Doctor Manimekalai Kannan. Thiruvalluvar Day Celebration on behalf of the Government of Tamil Nadu Chief Minister Palanisamy will present the Tamil New Year Awards and Tiruvalluvar and Anna Awards at the function held on Jan. 20 at the Tamil Nadu New Year Awards and Tiruvalluvar and Anna Awards.


No comments:

Post a Comment

Please Comment