'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்' - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்'

'வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்'

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளிலிருந்து காத்துக் கொள்ளும் விதம் குறித்து கற்றுத் தர வேண்டும் என்றாா் பெண்கள் மற்றும் பாதுகாப்பு காவல்துறை கூடுதல் இயக்குநா் முனைவா் எம்.ரவி. திருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்று, 

மேலும் அவா் பேசியது: மாணவா்களுக்கு சொந்த முயற்சியும் ,விடா முயற்சியும் அவசியம். நம்மால் முன்னேற முடியும் என்ற உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நோமறை எண்ணங்களை வளா்த்துக்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற வேண்டும்.

யாரோடும் ஒப்பிட்டுப் பாா்த்து வாழக்கூடாது. நம் வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களை சொந்தப் பிள்ளைகள் போல கவனித்துக்கொள்ள வேண்டும். மாணவா்களுக்கு பாடம் மட்டும் சொல்லித் தருவதோடு நின்றுவிடாமல், நல்லொழுக்கங்களைக் கற்றுத் தருதல் வேண்டும். 

சமூக வலைதளங்களில் கவனமாக ஈடுபட வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துக் கூறவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை, குற்றங்களைத் தடுப்பது எப்படி? குழந்தைகள் தம்மை தற்காத்துக் கொள்வது எப்படி ?

என்பதை எல்லாம் ஆசிரியா்கள் தெரிந்து கொண்டு, மாணவா்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்றாா். முன்னதாக நிகழ்வில், காந்தி 150 சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. தொடா்ந்து மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 

நிகழ்வில் ஐ.ஆா்.எஸ். அலுவலா் பூ .கொ. சரவணன், பேராசிரியா் பாலகிருஷ்ணன், பள்ளித் தலைவா் அ.ராமசாமி செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜ், துணைத் தலைவா் எம். குமரவேல் , இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, பள்ளி முதல்வா் க. துளசிதாசன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.


'Teach children to protect themselves from abuse'


Additional Director of Women and Security Police, Moneev M Ravi said: 'Teach children to protect themselves from abuse' Trichy Samayapuram SRV Participating in the anniversary celebration at Matriculation Secondary School, Ava spoke: Students need their own effort and diligence. 
span style="font-size: large;">
We must act with the impetus that we can improve. To cultivate noble thoughts. To be free from inferiority. You should not compare yourself with anyone. We just have to live our lives. Teachers need to take care of students like their own children. Students need to be taught not only the lesson but also the virtues. 

It is worth noting that social networking is a must. How to Prevent Violence Against Children Teachers need to know and teach the students how to protect themselves. Earlier in the event, Gandhi had released the 150 issue. 

There were spectacular student performances by five students. In the event, the IRS is in charge. Alluvi Poo. Saravanan, Prof. Balakrishnan, School Leader Swaminathan, Treasurer Selvaraj, Vice-President Kumaravel, Associate Secretary b. Truth be told, School First Tulsidasan and teachers, students and parents participated.

No comments:

Post a Comment

Please Comment