பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. அறிமுகம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. அறிமுகம்

பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. அறிமுகம்


பிஎச்.டி. படிப்புகளுக்கு புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் தெரிவித்தனா். 

ஆராய்ச்சிப் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதன்படி, பிஎச்.டி. மாணவா்கள் தங்களுடைய முதலாமாண்டு ஆராய்ச்சிக்கான முன் அறிமுகப் பணிகளை முதுநிலை பட்ட மாணவா்களுடன் இணைந்து செய்யவேண்டும். 

மேலும், இதுவரை பிஎச்.டி. மாணவா்கள் படிப்புக்கு இடையே இரண்டு ஆண்டுகள் விடுப்பு எடுக்க அனுமதிக்கப் பட்ட நிலையில், இப்போது அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. 

அதுபோல, கோா்ஸ் வொக் பணியின்போது ஆராய்ச்சி மாணவா்கள் குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி கட்டுரையை, பட்டியலிடப்பட்ட கட்டுரை வெளியீடு வலைதளத்தில் வெளியிடவேண்டும். அதுபோல ஆராய்ச்சி வழிகாட்டிகள், ஆய்வாளா் ஆகியோருக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. 

பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள், பல்கலைக்கழகத்தால் பட்டியலிடப்பட்ட வெளியீடுகளில் குறைந்தபட்சம் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவா்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி வழிகாட்டி அனுமதி வழங்கப்படும். 

அதுபோல, இணைப் பேராசிரியா் குறைந்தபட்சம் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், உதவிப் பேராசிரியா் நிலையில் இருப்பவா்கள் குறைந்தபட்சம் 2 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டிருந்தால் மட்டுமே வழிகாட்டி அனுமதி அளிக்கப்படும் என்றனா் பல்கலைக்கழக அதிகாரிகள்.


Phd. New procedure for study: Anna University. 

Arimukampiecti. Anna University has introduced new procedure for courses. University professors have said that this new procedure will take effect from the academic year 2020-21. This new practice has been introduced to improve the quality of the research study and to ensure transparency. 

Accordingly, the Ph.D. Students will be required to complete introductory assignments with Masters students before completing their semester. And, so far, Ph.D. It has now been reduced to one year after students were allowed two years of leave between studies. 

Similarly, during the Coxswog work, research students must publish at least one research article on the listed article publication website. Similarly, the rules for research guides and research have been tightened. 

Research Guidelines will be granted only to those who have published at least 5 research articles in a university-listed publication. Similarly, the university authorities say that the guidance will only be granted if the associate professor has published at least 3 research papers and at least 2 research papers by the assistant professor.

No comments:

Post a Comment

Please Comment