நாம் அதிக நேரத்தை வீணடிப்பது எப்போது தெரியுமா? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

நாம் அதிக நேரத்தை வீணடிப்பது எப்போது தெரியுமா?

நாம் அதிக நேரத்தை வீணடிப்பது எப்போது தெரியுமா?


வெளியூர் பயணத்தின் போதே நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நமக்கு கிடைக்கும் நேரத்தை திட்டமிட்டு முழுமையாக சரியாக பயன்படுத்த வேண்டும்.

நேரத்தின் அருமையை உணர்ந்தவர்களே வாழ்வின் வெற்றியாளர்கள் என பலர் கூறுவதுண்டு. இந்த நிலையில், மக்கள் எப்போது அதிக நேரத்தை செலவு செய்கிறார்கள் என தனியார் செய்தி நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. 

அதில், வெளியூர் பயணத்தின்போதே நாம் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் விடுமுறை எடுக்கும்போது கிட்டத்தட்ட அந்த ஒருநாள் முழுவதும் வீணடிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 

இதையடுத்து, இவெளியூர் பயணம் அல்லது சுற்றுலாவின் போது அதற்கான திட்டமிடல் செய்யும் நேரம், பயணத்திற்கான ஏற்பாடுகள், பார்வையிட வேண்டிய இடங்களைத் தேடுதல், புதிய இடங்களை வரிசையில் நிற்பது ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடுகிறோம்.

மேலும், பெரும்பாலானோர் திட்டமிட்டதை முழுமையாக செய்து முடிப்பதில்லை. திட்டமிட்ட நேரத்தை விட சரியாக பயன்படுத்திய நேரம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டடுள்ளது. 

சராசரியாக ஏழு நாட்கள் பயணம் மேற்கொண்டால் அதில் குறைந்தபட்சம் 17 மணி நேரம் வீணடிக்கிறார்கள் என்றும் அதே நேரத்தில், இதற்கு பின்புறத்தில் பல்வேறு காரணங்கள் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


When do we know we are wasting too much time? 

There are many people who say that they are the winners of life. In this case, a private news agency has studied how people spend more time. It has been reported that we spend a lot of time on outbound travel. 

A recent study suggests that when we take vacations, we spend almost that whole day. In addition, we spend more time planning the travel, travel arrangements, places to visit, and ordering new places during the trip. 

Also, most do not fully accomplish what they planned. It has been said that the timing used is much shorter than the scheduled time. An average of seven days of travel wastes at least 17 hours on the same day, and it has various reasons behind it.

No comments:

Post a Comment

Please Comment