கல்விச் செய்திகள் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

கல்விச் செய்திகள்

கூடுதல் செய்திகள்
🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
🌹🌹 5 , 8 - ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுதல் - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவுகள் - இயக்குனர் செயல்முறைகள்

🌹👉அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், பார்வையில் காணும்
கடிதங்களில் தெரிவித்தவாறு, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தங்களின்
மாவட்டத்திலுள்ள Cluster Resource Centre (CRC) ஆக செயல்படும் பள்ளிகள்
அப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட (பள்ளி எண் DISE CODE) பள்ளிகளில்
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின்
எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை , 17.01.2020 முதல் 25.01.2020 வரையிலான
நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திற்குச் சென்று
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி
பதிவேற்றம் செய்யவும். மேலும் இணைக்கப்படாத அரசு உதவி பெறும் மற்றும்
தனியார் பள்ளிகளை சம்பந்தப்பட்ட CRC மையத்தில் இணைத்திடுமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.

👉மேற்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கையின்
அடிப்படையிலேயே வினாத்தாட்கள் அச்சிட்டு வழங்கப்படுமாதலால், தமிழ்நாடு
பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் பதிவேற்றம் செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்துடன்
இணைப்பில் கண்டுள்ள சான்றிதழினை கையொப்பமிட்டு, ஸ்கேன் செய்து
அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
இவ்வலுவலக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்வது குறித்து சந்தேகங்கள் எழும் பட்சத்தில்
கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

1. 9385494105

2. 9498383073

ஓம்/
இயக்குநர்


சான்றிதழ்

நடைபெறவுள்ள மார்ச் ஏப்ரல் 2020 எட்டாம் வகுப்பு / ஐந்தாம் வகுப்பு

👉பொதுத் தேர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும்
அனைத்து பள்ளிகளில் (Except CBSE, ICSE & KV) பயிலும் ஐந்தாம் வகுப்பு /

👉எட்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் சம்பந்தப்பட்ட Cluster
Resource Centre (CRC) உடன் இணைத்து செய்யப்பட்டுள்ளது என
சான்றளிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்
கையொப்பம்
(அலுவலக முத்திரையுடன்             🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄
🌹🌹தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில்,
நிலவரப்படி ஆசிரியர்/மாணவர்
பணியாளர்
நிர்ணயம் செய்வது சார்பான
நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌹👉அதன் தொடர்ச்சியாக, பார்வை 5-ல் காணும்  பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச்
செயலாளர் அவர்களால் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதின் அடிப்படையில் EMIS
இணையதளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
விவரங்களின் அடிப்படையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம்
நடைபெற இருப்பதால், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும்
நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள
Staff profile-ல் 31.01.2020-க்குள் Update செய்யும் பணி முடித்தல் வேண்டும் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இனிவரும் காலங்களில் நிர்வாக மாறுதல் ஏதேனும் வழங்க நேரிடின், EMIS
இணையதளம் வாயிலாக மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும் அதைத் தவிர்த்து பிற வழிகளில்
(Manual order) ஆணை எதுவும் வழங்கக் கூடாது எனவும் திட்டவட்டமாகத்
தெரிவிக்கப்படுகிறது.


மாவட்ட அளவில் குழு அமைத்து இந்தப் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு
அனைத்து
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment