அமெரிக்காவில் கல்வி கற்பதற் காக செல்லும் மாணவர்கள் சரியான வழிகாட்டி நிறுவனங் களையே அணுக வேண்டும் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அமெரிக்காவில் கல்வி கற்பதற் காக செல்லும் மாணவர்கள் சரியான வழிகாட்டி நிறுவனங் களையே அணுக வேண்டும்

அமெரிக்காவில் கல்வி கற்பதற் காக செல்லும் மாணவர்கள் சரியான வழிகாட்டி நிறுவனங் களையே அணுக வேண்டும்

 இந்திய அமெரிக்க கல்வி சங்கம் அறிவுரை 

அமெரிக்காவில் கல்வி கற்பதற் காக செல்லும் மாணவர்கள் சரியான வழிகாட்டி நிறுவனங் களையே அணுக வேண்டும் என்று இந்திய அமெரிக்க கல்விச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங் களின் இந்திய பிரதிநிதிகள் சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் அண்மையில் நடை பெற்றது. இச்சங்கத்தை சென்னை யில் உள்ள அமெரிக்க தூதரக துணைத் தூதர் ராபர்ட் ஜி பர்கஸ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் டாக்டர் பால் செல்லகுமார் வரவேற்று பேசியதாவது: 


 ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொண்டு, அதன் மூலமாக அயல்நாடுகளுக்குச் சென்று கல்வியும் வேலையும் பெறுவது என்பது பலரின் கனவாக உள்ளது. உலகின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்களில், 7 அமெரிக்காவில் உள்ளன. இதை கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கச் செல்லும் கனவு பலருக்கு உள்ளது. ஆனால், கல்வி வழிகாட்டி மையங்கள் என்ற பெயரில் நாள்தோறும் பல நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அவை மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கல்விக் கனவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபடு கின்றன. 

எனவே, சரியான கல்வி வழிகாட்டி நிறுவனங் களையே மாணவர்கள் அணுக வேண்டும். இந்திய மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் மூலமாக அமெரிக்கா சென்று உயர்தர கல்வி பெறுவதற்காகவே இந்த சங்கத்தைத் தொடங்கி இருக் கிறோம். வகைப்படுத்தப்பட்ட அறநெறிகளின் அடிப்படையில் தான் இந்த சங்கம் நிறுவப் பட்டுள்ளது. 

 இதுகுறித்த விவரங்களை www.aaaae.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை சங்க செயலாளர் சபேசன் மாணிக்கவாசகத்தை 9841014499 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு பால் செல்லகுமார் தெரிவித்தார்.

Students who go to study in the United States should consult the right mentoring institutions

 Indian American Educational Association Advice

The Indian American Educational Association advises that students who go to study in the United States should consult the right mentoring institutions. The inauguration of the Indian Universities Delegation of American Universities recently took place in Chennai. The event was inaugurated by Robert G. Burgess, US Ambassador to the US in Chennai. 


The President of the Association, Dr. Paul Selkumar welcomed the gathering and said: “It is a dream of many to acquire English language skills and study abroad. Of the world's top 10 universities, 7 are in the United States. Considering this, many have the dream of attending schools and colleges in the United States. However, there are many organizations which are being created in the name of Educational Guidance Centers. They are actively involved in making money by transforming students 'and parents' academic dreams to their advantage. Therefore, students should access the right educational guidance institutions. 

We started this association with the right guidance of Indian students to go to the US and get higher education. The association is founded on assumed morality. You can find out more about this at www.aaaae.org. Further details can be obtained by contacting the Secretary of the Association, Saabesan Gamini Vasavakkam on 9841014499. Thus said Paul Selkumar.

No comments:

Post a Comment

Please Comment