அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பயோமெட்ரிக் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பயோமெட்ரிக்

அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பயோமெட்ரிக்

சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவு 


மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணி யில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 49,554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண் டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாண வர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. 


 இருப்பினும், சத்துணவின் பயன் முழுமையாக மாணவர் களுக்கு சென்று சேருவதை அதி காரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து துல்லிய மாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: 

சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெற்றுச் செல்லலாம். புதிதாக சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Biometric to make sure all students have nutrition

Social Welfare Department decision

Social welfare officials are working on implementing a bio metric system in schools to ensure that students have nutrition. Over 49 lakhs of students and students benefit from 49,554 nutrition centers across Tamil Nadu. It was surveyed how many pupils were being supplied daily by head teachers, who were not sure if the nutritious meals were served to them. 

However, the supercars cannot guarantee that the benefit of nutrition will go to the students. Social welfare officials have decided to implement the biometric method to determine the accuracy. 

According to a social welfare official, 10 schools in Chennai have been selected on the basis of the test and the students who eat the nutrient after registering the fingerprint in a biometric manner. Food will also be provided to the newly arrived students. Food is not denied for anyone. Depending on the reception, it will be implemented throughout Tamil Nadu. Thus he said.

No comments:

Post a Comment

Please Comment