வண்டிகளின் எண் பலகையும் - அதன் அர்த்தங்களும் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

வண்டிகளின் எண் பலகையும் - அதன் அர்த்தங்களும்

வண்டிகளின் எண் பலகையும் - அதன் அர்த்தங்களும்


ரோட்டுல போகும்போது கலர் கலரான நம்பர் பிளேட்டோட வண்டிங்க என்னை கிராஸ் பண்ணும். அப்போ யோசிப்பேன், ஏன் இந்த கலர்னு? ஆனா அப்போ எரியற அந்த பல்பு, வண்டி என்னை தாண்டி போனதும் பியூஸ் ஆயிடும். 

நான் தெரிஞ்சிக்க நினைச்ச விஷயத்தை நீங்களும் தெரிஞ்சுக்கத்தான் இந்த கட்டுரை!! *வெள்ளை: வண்டில வெள்ளை ப்ளேட்ல கருப்பு எழுத்து இருந்தா அது தனியார் வண்டி அல்லது சொந்த உபயோகத்திற்கான வண்டி என அர்த்தம். மேலும், இதை வணிக போக்குவரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

*மஞ்சள்: வாடகை மற்றும் வியாபார ரீதியிலான வணிக போக்குவரத்து வண்டிகளான டாக்ஸி, ட்ரக்குகள் போன்றவைக்கு மஞ்சள் வண்ண பலகையில், கருப்பு வண்ண எண்கள் பதியப்பட்டிருக்கும். 

மேலும் இதற்கென தனி டிரைவிங் பெர்மிட் அவசியம். (வெளிமாநிலங்களில் பயன்படுத்த பெர்மிட் அவசியம், அல்லது தற்காலிக பெர்மிட் பெற்ற பிறகே பயன்படுத்த முடியும்.)

*கருப்பு: கருப்பு பலகையில் மஞ்சள் நிற எழுத்து / எண் பதியப்பட்டிருந்தால், அதனை வாடகைக்கு எடுப்பவரே சொந்தமாக ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட வாகனம் என்று பொருள்படுகிறது. 

*சிவப்பு: குடியரசு தலைவர், ஆளுநர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இதுப் போன்ற சிவப்பு நிற பலகையில் தங்க நிறத்தில் எழுத்துக்கள் மற்றும் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 

*நீலம்: இவை வெளிநாட்டு தூதரக வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களில் நீல வண்ண பலகையில் வெள்ளை நிறத்தில் எண்கள் பதியப்பட்டிருக்கும். முதலில் இருக்கும் இரண்டு எண்களும், எந்த நாட்டு தூதரகத்தை சேர்ந்தது என்பதை குறிக்கிறது. 

*ராணுவ எண் பலகை: மேல் நோக்கிய அம்புக்குறி ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேற்குறிக்கு அடுத்து வரும் எண்கள், எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது. 

வாகன வகை மற்றும் வரிசை எண்கள் இந்த பதிவு எண் பலகையில் குறிப்பிடப்படுகிறது. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கண்டு புடிச்சேன், பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க!!!The number plate of the carriage - and its meanings 


when the color of the number plating with the number plate cross me. Then I wonder, why this color? But then the bulb, the car will burn, the fuse will pass when the car passes me. This article is for you to discover the thing I wanted to know !! 

* White: The white plate of the car is in black lettering, which means private cart or personal use cart. Also, it should not be used for commercial transport. 

* Yellow: Black and white numbers are displayed on the yellow board for taxi and trucks for hire and commercial transport. Also, a separate driving permit is required. (Permits are required for use in outdoors, or can only be used after receiving a temporary permit.) 

* Black: If a yellow letter / number is inscribed on a black board, it is a vehicle that the tenant is allowed to drive. 

* Red: On the red board of the Republic President, Governor and top government official vehicles, the letters are embossed with gold letters and the national emblem. 

* Blue: These are foreign embassy vehicles. These vehicles have white numbers on the blue board. The first two numbers indicate which country the embassy belongs to.

* Military number board: Up arrow is used in military vehicles. Numbers next to the west indicate which year it was made. Vehicle type and serial numbers are indicated on this registration number board. Just a little bit of trouble, I think

No comments:

Post a Comment

Please Comment