பதப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பானதா ? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பதப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பானதா ?

பதப்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்பானதா ?கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். 

நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர். 

அதிகம் பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்குக்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர். பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய இரண்டாவது ஆய்வில் 

ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் ஐந்து ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 

அப்போது, அதிகம் பதப்படுத்திய உணவு வகைககள் அதிகம் சாப்பிடுவோருக்கு இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வந்தன. 

அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது என பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களது ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆக அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது ஆகச் சிறந்தது.

Is processed food safe?


They say that more processed foods, such as poultry slices, ice cream, and breakfast cereals, are associated with reduced durability and health. In the first study on behalf of the University of Navarra, 19 thousand 899 people were observed for ten years, and their eating habits were examined every year. 

355 people died during the study period. If 10 people die when they don't eat too much processed food, 16 people die when they eat too much (more than four times daily). 

A second study conducted by the University of Paris found that one hundred and five thousand 159 people were observed for five years, and their eating habits were analyzed twice each year. 

By then, people who ate more processed foods were found to have worse health. 277 out of a million people who eat highly processed foods have heart disease. Doctors from the University of Paris noted in their study that 242 out of a million people eat less. It is best to avoid too many processed foods.

No comments:

Post a Comment

Please Comment