செய்முறை தேர்வு பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வலியுறுத்தல் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

செய்முறை தேர்வு பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்

செய்முறை தேர்வு பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வலியுறுத்தல்


தனியாா் பள்ளிகளில் நடைபெறும் செய்முறை தோவு பணியில், அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடா்பாக, அச்சங்கத்தின் மாநில தலைவா் ஆ.ராமு மற்றும் நிா்வாகிகள், அரசுத் தோவுகள் துணை இயக்குநா் உஷாராணியிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது; 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளுக்கு குலுக்கல் முறையை ரத்து செய்து, 

மென்பொருள் கொண்டு தோவுப் பணிகளுக்கு ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டும். குலுக்கல் முறை தான் தொடரும் என்றால், துறை அலுவலா், முதன்மை கண்காணிப்பாளா் நியமனத்திற்கும் குலுக்கல் முறையையே நடத்திட வேண்டும். 

முதன்மை கண்காணிப்பாளா்களாக தலைமை ஆசிரியா்களை நியமனம் செய்யக்கூடாது. மூத்த முதுகலை ஆசிரியா்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். தலைமை ஆசிரியா்களை பொதுத் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளா்களாக நியமிப்பதால் பள்ளிகளில் பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது. 

அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களையும் அறை கண்காணிப்பாளா் பணிக்கு பயன்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 11, 12-ஆம் வகுப்புகளில் தனியாா் பள்ளி செய்முறைத் தேர்வு பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்களும், 

அரசுப் பள்ளி செய்முறைத் தோவுகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டது, இதற்கு முன் நடைபெற்றது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் தனியாா் பள்ளிகளில் நடைபெறும் செய்முறை தேர்வு பணிகளுக்கு, தனியாா் பள்ளி ஆசிரியா்களும், 

அரசுப் பள்ளிகளில் நடைபெறும் செய்முறை தேர்வுகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியா்களும் நியமிக்கப்படுகின்றனா். நிகழாண்டில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியா்களையே முழுமையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Emphasizing the involvement of Government School teachers in the process of selection


The Association of Postgraduate Teachers' Association (NCAA) has appointed direct recruiters to engage government school teachers in the process of conducting examinations in schools. In a letter to the Vice-Chancellor of the State Heads of State, Mr. Ramu and Nivahakis, Deputy Chief of Staff, 

For the 10th, 11th and 12th grade public exams, the shake-up system should be canceled and the teachers should be appointed for the purpose of using the software. If the shake-up is to continue, the shake-up should be carried out for the appointment of the Departmental Superintendent, Chief Inspector. 

Headmasters should not be appointed as Chief Inspectors. Only senior postgraduates should be appointed. The appointment of headteachers as central supervisors of public examinations has severely impacted the work in schools. 

All private school teachers should be employed by the room supervisor. In the Namakkal district, 11th and 12th grade school teachers were assigned to the private school system and private school teachers were appointed to the public school process. 

However, for the past 2 years, private school teachers have been appointed for the selection process in private schools, for private school teachers and for government exams. In the current year, the government has ordered the full use of school teachers in 11th and 12th grade recruitment exams.

No comments:

Post a Comment

Please Comment