இனி உங்கள் வாட்ஸ்அப்பை கைரேகை மூலம் பாதுகாக்கலாம்! பயன்படுத்துவது எப்படி? - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இனி உங்கள் வாட்ஸ்அப்பை கைரேகை மூலம் பாதுகாக்கலாம்! பயன்படுத்துவது எப்படி?

இனி உங்கள் வாட்ஸ்அப்பை கைரேகை மூலம் பாதுகாக்கலாம்! பயன்படுத்துவது எப்படி?


வாட்ஸ்அப் நிறுவனம் கைரேகை மூலம் லாக் செய்து தகவல்களை பாதுகாக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் உங்கள் வாட்ஸ்-அப்பின் அதிகாரப்பூர்வ கணக்கை பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். அலுவலகங்களில் கூட வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கின்றனர். 

இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை வாங்கியதில் இருந்தே பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் இந்த வசதியையும் இனி பயன்படுத்தி கொள்ளலாம். 

கடந்த ஆண்டே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நீங்கள் கவனிக்க மறந்திருந்தால் இந்த புதிய வசதிபற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் இதனை பயன்படுத்தலாம். 

கணக்கைப் பாதுகாக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் கைரேகை மூலம் சுலபமாக அக்கவுண்டை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் சுலபமாக இந்த புதிய வசதியை பெற இந்த வழிகளை பயன்படுத்துங்கள். 

* உங்களது வாட்ஸ்அப் அக்கவுண்டில் செட்டிங்ஸ் பகுதிக்குச் செல்லுங்கள். 

* அதில் அக்கவுண்ட் > பிரைவசி செல்லுங்கள் 

* பிரைவசியில் கடைசி இடத்தில் கைரேகை லாக் (finger print lock) என்ற ஒரு வசதி இருக்கும். 

அதை கிளிக் செய்து உங்கள் கைரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பு: ஆண்ட்ராய்ட் 6.0 மற்றும் அதற்கு மேல் தான் இந்த கைரேகை வசதியை பயன்படுத்த முடியும். ஐஓஎஸ் ஆண்ட்ராய்ட் போல தான் ஐஓஎஸ் போனிலும். 

ஏற்கெனவே இதில் கைரேகை வசதி உள்ள நிலையில், இப்போது முகத்தின் மூலம் (ஃபேஸ்லாக்) லாக் செய்து பயன்படுத்தலாம். உங்கள் ஐஓஎஸ் போனில் சுலபமாக புதிய வசதியை பெற இந்த வழிகளை பயன்படுத்துங்கள்.

உங்களது வாட்ஸ்அப் செட்டிங் பகுதிக்குச் சென்று, அதில் அக்கவுண்ட் > பிரைவசி செல்லுங்கள். அங்கு இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


You can now secure your WhatsApp with Fingerprint! 

WhatsApp: WhatsApp has introduced a new feature to secure information by locking fingerprints. There are millions of people around the world contacting others through WhatsApp. Even in offices, WhatsApp teams have been set up to advise on the company's growth. 

Since then, Facebook has been making various security efforts since its acquisition of WhatsApp. That way the facility can no longer be used. If you forgot to notice when the announcement was made last year, check out this new feature now. Android and iOS users can use it. 

Customers can easily activate the account with a fingerprint to secure the account. Use these ways to get this new feature easily on your Android phone. 

* Go to the Settings section of your WhatsApp account. 

* Go to Account> Privacy 

* Fingerprint lock is a feature of last resort. You can click it and register your fingerprint. 

Note: This fingerprint feature is only available for Android 6.0 and above. IOS is just like Android on the iOS phone. With the fingerprint already in place, it can now be used to lock the face (facelock). 

Use these ways to easily get the new feature on your iOS phone. Go to your WhatsApp settings section and go to Account> Privacy. You can take advantage of this feature there.

No comments:

Post a Comment

Please Comment