குழந்தைக்கு தமிழில் பெயர் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

குழந்தைக்கு தமிழில் பெயர் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு

குழந்தைக்கு தமிழில் பெயர் பெற்றோருக்கு பரிசு அறிவிப்பு



புதுச்சேரி:குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு, பரிசு வழங்கப்படும் என, படைப்பாளர் இயக்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து இயக்கத்தின் நிறுவனர் ஆறுசெல்வம் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பண்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையை போக்கவும், தமிழினத்தின் அடையாளத்தைக் காக்கவும், இன்று (15ம் தேதி) முதல் 2021 ஜன., 15 வரையில் புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

பெற்றோர் புதுச்சேரியில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும், பெயர்கள் பிறமொழிச் சொற்கள், எழுத்துகள் கலவாமல் இருக்க வேண்டும், அவ்வாறு பெயர் சூட்டும் ஒரு தாய், தந்தைக்கு ஒரு பரிசு என்ற கணக்கில் இவ்வாண்டுக்குள் எங்களுக்குத் தெரிவிக்கும் அனைத்துப் பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்படும். 

இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் இரண்டு பரிசுகளாக வழங்கப்படும்.தங்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன், ஆறு செல்வன், எண் 4, காமராஜர் தெரு, வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி 9, என்ற முகவரிக்கு தகவல்தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



Gift announcement for parents in Tamil


Puducherry: The Creator Movement has announced that the prize will be given to children who have made a name for themselves in Tamil.The culture of naming children in Tamil is declining day by day. 

In order to overcome this situation and to protect the identity of the Tamil people, a gift will be given to parents born in Puducherry from today (15th) to 15th January 2021.

Parents should be residents of Puducherry, names should be colloquial, non-verbatim, gifts to all parents who tell us within this year that a naming mother is a gift to the father.

If you are a twin child, you will be given two prizes. With their name, address and contact number, you can inform the address of Aara Selvan, No. 4, Kamarajar Street, Vb Singh Nagar, Shanmugapuram, Puducherry 9, he said.

No comments:

Post a Comment

Please Comment