உங்கள் படிப்புத் திறனை மேம்படுத்தக்கூடிய 5 டிப்ஸ் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

உங்கள் படிப்புத் திறனை மேம்படுத்தக்கூடிய 5 டிப்ஸ்

உங்கள் படிப்புத் திறனை மேம்படுத்தக்கூடிய 5 டிப்ஸ்


நீங்கள் தொடர்ச்சியாக 2 மணி நேரம் படித்துக் கொண்டே இருந்தால், உங்களின் மனப்பாட சக்தி கணிசமாக குறைவதை அறிவீர்களா? எப்போது பார்த்தாலும் பாடத்தைப் பற்றியே மனதில் யோசித்துக் கொண்டிருந்தால், படித்த விஷயங்களை மனதில் தக்க வைத்துக் கொள்ளும் திறன் மெல்ல மெல்ல குறைந்து விடும். 

எனவே படிப்பில் மனம் லயிக்கவும், மனப்பாட திறனை அதிக அளவில் மேம்படுத்தவும் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை இடைவெளி விட்டு படிப்பது மிகவும் அவசியம் என ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட பலர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் பரிந்துரைக்கின்றன. 

ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒருமுறை இடைவெளி விடுவது உங்கள் மூளை மீண்டும் புத்துணர்ச்சி அடைய தேவையான ஓய்வு தரும். அந்த இடைவெளி உங்கள் மனப்பாட திறனையும் கவனத்தையும் அதிகரிப்பதாக இருக்க வேண்டுமே தவிர உங்கள் ஓட்டத்தை தடுப்பதாக இருந்துவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

நீங்கள் ஓய்வு எடுக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் கவனம் திசை திரும்பாமல் இருக்கச் செய்வதற்கான 5 யோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.  

1. யோகா மனப்பாடத்திறனை அதிகரிக்க உதவும் மிகவும் பயனுள்ள செயல்களில் குறிப்பிடத்தக்கவை யோகா மற்றும் தியானம். யோகா மற்றும் தியான பயிற்சி, உங்கள் மனதையும் உடலையும் ஊக்குவிக்கும். தியானத்தை சரியாகச் செய்தால், நீங்கள் முழுமையாக ஓய்வெடுக்கவும், கவனத்தை கணிசமாக அதிகரிக்கவும் உதவும். 

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் தசை வலிகளை போக்க யோகா உதவுகிறது. இரண்டையும் சுமார் 20 நிமிடங்களுக்கு செய்தால் போதும், அடுத்த 90 நிமிட படிப்புக்கு உங்களை ரசார்ஜ் செய்து கொள்ளலாம். 

2. ஆரோக்கியமான தின்பண்டங்கள்நீங்கள் படிக்கும்போது ஒரு குறிப்பிட்ட சூயிங்கத்தை மெல்வீர்களானால், அதே சுவை கொண்ட சூயிங்கத்தை தேர்வு எழுதும் போதும் எடுத்துக் கொண்டால், படித்த பாடங்களை நினைவுபடுத்திப் பார்க்கும் திறன் மிக அதிகமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இடைவெளி நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிடுவது ஒரு நல்ல வழிமுறை என்றாலும், சர்க்கரை அல்லது வறுத்த உணவுகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம். பாக்கெட்களில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள் மற்றும் குளிர் பானங்களிலிருந்து விலகி இருங்கள். 

வெட்டப்பட்ட கேரட், வெள்ளரி, சிறப்பாக தயாரித்த ஹம்மஸ், பாதாம் மற்றும் வால்நட் உள்ளிட்ட நட்ஸ்கள் அல்லது பிளைன் அவகோடா போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை முயற்சிக்கலாம். 

உங்கள் வயிற்றை கனமாகவோ அல்லது உப்புசமாகவோ மாற்றக்கூடிய உணவுகளை தவிர்ப்பது, உங்கள் கவனத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் மனதையும் எச்சரிக்கையாக வைத்திருக்கும். 

3. நடைப்பயிற்சி செய்யுங்கள்உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக. நடைபயிற்சி கருதப்படுகிறது, மேலும் உங்கள் படிப்பு நேரத்திற்கு இடையில் ஒரு 15 நிமிடம் நடைபயிற்சி செய்வது உங்கள் மனதை முழுமையாக படிப்பில் ஈடுபட வைக்கும். உங்கள் வீட்டுக்குள்ளேயே நடக்க வேண்டாம். 

வெளியே வெளியே சென்று பிரஷ்ஷான காற்றில் நடைபோடுங்கள். அதேசமயம் கவனமாகவும் இருங்கள். ஒரு நல்ல நடை பயிற்சி உடல் வலியை குறைக்க செய்யும், எண்டோர்பின் ஹார்மோனை சுரக்கச் செய்யும். 

இது நேர்மறையான மன ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது, மேலும் அதிக தக்கவைப்பு திறன் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் தூண்ட உதவுகிறது. 

4. குட்டித்தூக்கம்நல்ல ஓய்வுடன் நிதானமாக இருக்கும் மனமே சிறப்பாகச் செயல்படும். தூக்கத்தின் போது தான், நம் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்கிறது மற்றும் புத்துயிர் பெறுகிறது. நீங்கள் நீண்ட நேரம் படிக்கும்போது, ​​உடல் ரீதியாக சோர்வடையாமல் இருக்கலாம், 


ஆனால் உங்கள் மனம் நிச்சயம் சோர்ந்து விடும். சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற ஒரு நல்ல வழி, குட்டித் தூக்கம் போடுவது தான். இது உங்கள் மூளையையும் புத்துணர்ச்சி ஆக்கும். இது, மீதமுள்ள நாளில் உங்களுக்கு தேவையான ஓய்வை அளித்து நீண்ட நேரம் புத்துணர்ச்சியோடு உங்களை செயல்படச் செய்யும் கிக் ஸ்டார்ட் ஆகும். 

5. புத்துணர்ச்சி வீடியோக்களை பாருங்கள்ஒரு நீண்ட கடினமான நாளுக்குப் பிறகு, நம்மில் பெரும்பாலோர் ஒரு திரையின் முன் அமர்ந்து தியேட்டரில் ஒரு நல்ல திரைப்படம் அல்லது டிவியில் ஒரு நல்ல தொடரில் மூழ்குவதைத் தேர்வு செய்கிறோம். 

இது சலிப்பான வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து ஒரு இடைவெளி தருகிறது, மேலும் சிரிப்பு, சிலிர்ப்பு மற்றும் நாடகத்தனம் நிறைந்த ஓர் உலகத்திலிருந்து தப்பிக்கவும் செய்கிறது. நீங்கள் 90 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் படிக்கும்போது, 

சிறிது நேரம் இடைவெளிவிட்டு ​​உங்கள் ஸ்ட்ரீமிங் நெட்வொர்க்கிற்கு செல்வது அல்லது சுவாரஸ்யமான வீடியோ ஏதேனும் ஒன்றை பார்ப்பது அருமையான வழி. ஆனால், அதற்கான நேரத்தை நீங்களே நிர்ணயித்து ஒதுக்குங்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரத்தை மீற வேண்டாம். 

இதுபோன்ற நேரங்களில், உங்களிடம் வேகமான கனெக்சன் இருப்பது முக்கியம், அது பஃப்பரிங்களுக்காக நீங்கள் காத்திருப்பதை தவிர்க்க உதவும். ஏர்டெல்லின் டேட்டா கனெக்சன் வேகமாக இருப்பது மட்டுமல்லாமல், 

அதன் தேங்க்ஸ் புரோகிராம் மூலம் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மற்றும் 3 மாத நெட்ஃபிலிக்ஸ் பேசிக் பிளான் மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது. 

எனவே எதற்காக நீங்கள் இன்னும் காத்திருக்கிறீர்கள்? புத்தகங்களில் உங்களை மூழ்கடிக்க வேண்டாம். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஏர்டெல் தேங்க்ஸ் மூலம், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் பார்த்து உங்கள் மனதை புதுப்பித்து, புத்துயிரூட்டுங்கள்! ஏனெனில், நிதானமாக உள்ள மனமே கவனம் செலுத்தும் மனமாகும்.


5 Tips to Improve Your Study Ability

Do you know that if you have been studying continuously for 2 hours, your mental powers will be significantly reduced? Whenever you are thinking about a lesson, your ability to keep up with what you have learned will slowly diminish.

Study results published by many, including Harvard University, suggest that a few hours of interval study is essential to improve mindfulness and mental ability.

Taking a break every 90 minutes will give your brain the rest it needs to rejuvenate. It is advised that the interval should not only increase your mental ability and attention but also prevent your flow.
Here are 5 ideas to help you stay focused every time you retire.

1. Yoga and meditation are among the most effective activities that can help increase yoga mindfulness. Yoga and meditation practice will stimulate your mind and body. If meditation is done properly, it will help you to relax completely and increase focus significantly.

Yoga helps to relieve muscle aches caused by sitting in one place for long periods of time. Doing both for about 20 minutes is enough to charge you for the next 90 minutes.

 2. Healthy Snacks If you chew a certain chewing gum while you read, even if you choose to write a chewing gum with the same taste, do you know that the ability to recall the lessons is much higher?

While eating snacks during breaks is a good option, don't use too much sugar or fried foods. Stay away from chips and cold drinks wrapped in pockets.

You can also try healthy snacks such as nuts or plaine avocado, including sliced ​​carrots, cucumbers, specially made hummus, almonds and walnuts.Avoiding foods that make your stomach heavy or salty will increase your attention and keep your mind alert.

3. Do a walk as the best form of physical exercise. Walking is considered, and a 15 minute walk between your study time will keep your mind fully engaged in the study. Do not walk into your home.

Get out and walk in the breezy air. At the same time, be careful. A good style of exercise will reduce body pain and secrete the endorphin hormone.This leads to positive mental flow, and helps to stimulate greater retention potential and interest in learning.

4. A relaxed mind with good rest will work better. It is during sleep that our body heals and rejuvenates itself. When you study for long periods of time, you may not be physically tired;

But your mind will surely be exhausted. One of the best ways to relieve exhaustion and get refreshed is to go to bed. It will also refresh your brain. This is the kickstart that will give you the rest you need for the rest of the day and keep you refreshed for a long time.

5. Watch refreshing videos After a long hard day, most of us choose to sit in front of a screen and sink into a good movie or TV in a good series.It provides a break from the monotonous flow of life and escapes from a world full of laughter, thrills and drama. 

When you read 90 minutes or more,It's a great way to break free and go to your streaming network or watch some interesting video. But set aside time for it, and don't overdo it when you watch shows.

In times like these, it is important that you have a fast connection that will help you avoid waiting for the buffers. Not only is Airtel's Data Connection fast, it also offers Amazon Prime Membership and its 3-month Netflix Basic Plan membership through its Theanks program.

So what are you waiting for? Don’t immerse yourself in books. Take a rest. With Airtel Things, Refresh and Refresh Your Mind Because the relaxed mind is the focus mind.

No comments:

Post a Comment

Please Comment