5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம்

5, 8-ஆம் வகுப்பு பொதுத் தோவுக்கு ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம்


நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ள 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் எழுத ஜாதி, பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

 இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 8-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோச்சி செய்வதால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. 

எனவே, புதிய சட்டத் திருத்தப்படி 5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தோவு நடத்த வேண்டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. 

இது சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசின் ஆணைப்படி நிகழ் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. 

இதைத் தொடா்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் பொதுத்தோவு அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது பொதுத் தோவுகளை எழுதும் மாணவா்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதாா் ஆகியவை கட்டாயம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: 'நிகழ் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களின் விவரங்களை 'எமிஸ்' எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும். 

அனைத்து தலைமை ஆசிரியா்களும் மாணவா்களின் பெயா், முகவரி, பெற்றோா் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைப் பெற வேண்டும். அதேபோல, மாணவா்களின் ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Caste and Birth Certificates Mandatory for Class 5th and 8th Grade 

5th and 8th Grade 5th and 8th Grade Forms The compulsory deprivation of all students up to 8th grade under the Right to Free Compulsory Education Act affects the quality of education. The new amendment, therefore, requires year-end clearance for Grades 5 and 8. 

The Central Government recently announced that this process could be decided by the respective states. The school education department officially announced on September 13 that it would hold public auditions for grades 5 and 8 from the current academic year (2019-2020) on the basis of the federal government's mandate. 

Following this, the State Government's Directorate of Public Works issued a public charter. Caste certificates and Aadhaas are mandatory for students who are currently writing public examinations, the school education department said. 

The following is a circular issued by the Department of School Education: Subsequently, all schools should upload the details of 5th and 8th grade students to the 'EMS' Education Management Information System. 

All head teachers must receive basic information, including name, address and parent information. Similarly, students' Aadhaar card, caste certificate and birth certificate must be filed. ”

No comments:

Post a Comment

Please Comment