செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக குரூப்-4 தோவுக்கான பயிற்சி - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக குரூப்-4 தோவுக்கான பயிற்சி

செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக குரூப்-4 தோவுக்கான பயிற்சி

சென்னை: செவித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநா் வி.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 தோவுகளுக்கு, கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது இப்பயிற்சிகளை விரிவுபடுத்தி செவித்திறனற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தோவுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இம்மையத்திலேயே நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், ஏ28 , முதல் தளம், டான்சி காா்ப்பரேட் தலைமை அலுவலகம், 

கிண்டி, சென்னை - 32 என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 22500134 என்னும் தொலைபேசி எண் வாயிலாகவோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Free Group-4 Training for the Deaf and Disabled

Chennai: DNPSC provides free training for deaf and hard of hearing persons Director of Employment and Training Department Vishnu said in a statement:

The training workshops have been held from August 9 to August 1, Volume 1 and Volume 2, conducted by the Tamil Nadu Government Employee Service Center at the State Guidance Guidance Center at Kindi.

At present, it is decided to extend these training courses to the students of the Deaf and Disabled Translators, a weekly free-to-be-held workshop for Volume 4 exams conducted by the Tamil Nadu Government Employee Service from Monday to Friday.

The minimum tuition for this training should be 10th grade. Interested in attending these events, A28, First Floor, Dansi Corporate Headquarters,The State Career Guidance Center, which operates at Kindi, Chennai - 32, can be reached by phone or by telephone on 044 22500134.

No comments:

Post a Comment

Please Comment