பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவல், சீருடை பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவல், சீருடை பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,186 காவல், சீருடை பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கங்கள் 


பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை பணியாளர் களுக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக காவல் துறை, தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறைகளில் பணி யாற்றுவோர் தங்கள் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல் பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக் கும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. 

இந்த ஆண்டு காவல்துறையில் ஆண், பெண் காவலர்கள் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார், சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலையில் 3 ஆயிரம் பேருக்கு தமிழக முதல் வரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட் டுள்ளார். மேலும் தீயணைப்புத் துறை யில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 பேருக்கும், சிறைத்துறையில் முதல்நிலை வார்டர்கள், 2-ம் நிலை வார்டர் (பெண்) நிலைகளில் 60 பேருக்கும், தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

 இந்த பதக்கங்கள் பெறுபவர் களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, இந்தாண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், காவல் வானொலி பிரிவு, நாய்ப்படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரி கள் மற்றம் அலுவலர்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதல்வ ரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படுகிறது. இப்பதக்கங்களைப் பெறும் அதி காரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்கு தக்கவாறு ரொக்கத் தொகை வழங்கப்படும். 


இதற்கென நடைபெறும் சிறப்பு விழாவில், இப்பதக் கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள வர்களுக்கு முதல்வரால் பதக்கம் மற்றும் பதக்கச் சுருள் வழங்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Chief Minister's medals for 3,186 police and uniformed personnel in front of Pongal

Prior to the Pongal festival, the Government of Tamil Nadu has announced that 3,186 Tamil Nadu Police and Uniformed Officers will be awarded first medals. The Tamil Nadu Government yesterday issued a statement saying: 

"The Tamil Nadu Police, Fire and Rescue Service and the Prisons Department have been awarded the Chief Minister's medals every year in recognition of the unparalleled performance of their work. 

Chief Minister Palanisamy has ordered Tamil Nadu's first-class police medals to be awarded to three thousand male and female guards in the state this year. He has also ordered the Chief of Fire Department to serve 120 firefighters, driving squadrons and firefighters, first-class wards in prison, 60-second-stage warders (female) and 60 Tamil Nadu Chief Minister. 

The medal recipients will be awarded a monthly medal of Rs.400, with effect from 1st February this year. In addition, a total of 6 officers and officers in the Police Radio Division, the Dog Squad and the Police Photographer's Division are awarded the Tamil Nadu Chief Technical Officer's Commander's Technical Service Medal. The super cars and officers who receive these positions will be paid a sum of money according to their positions. 

At the special ceremony, medals and medals will be presented by the Chief Minister to those who have declared them. It says so.


No comments:

Post a Comment

Please Comment