எந்த குழப்பமும் வேண்டாம்: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அரசு குடிமக்களிடம் கேட்கப்போகும் 30 கேள்விகள் இது மட்டும்தான்! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

எந்த குழப்பமும் வேண்டாம்: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அரசு குடிமக்களிடம் கேட்கப்போகும் 30 கேள்விகள் இது மட்டும்தான்!

எந்த குழப்பமும் வேண்டாம்: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அரசு குடிமக்களிடம் கேட்கப்போகும் 30 கேள்விகள் இது மட்டும்தான்!


தேசிய மக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தும் வேண்டுமென்றே எதிர்கட்சிகள் மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி மக்களைக் குழப்பி வருகின்றன. 

இந்த நிலையில் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. 2020 ஏப்ரல் 1 அன்று தொடங்கவுள்ள கணக்கெடுப்பின் போது குடியிருப்பாளர்களிடமிருந்து அதிகாரிகள் பெற விரும்பும் 31 கேள்விகளின் பட்டியல் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

இந்த விவரம் சேகரிக்கும் பணிகள் 2020 செப்டம்பர் 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்கப்பட உள்ள 31 கேள்விகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன:- 

1.கட்டிட எண் (நகராட்சி அல்லது ஊராட்சியால் குறிப்பிடப்பட்டது அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறிப்பிடப்படும் எண்). 

2. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குரிய வீடு எண். 

3. வீட்டின் கூரை, தரை மற்றும் சுவர் எந்த மூலப் பொருளால் ஆனது என்கிற விவரம். 

4. வீடு பயன்பாட்டைப் பற்றிய உறுதித் தன்மை குறித்து அறிதல் 

5. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் நிலை. 

6. வீட்டு வரிசை எண். 

7. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை. 

8. வீட்டுத் தலைவரின் பெயர். 

9. வீட்டுத் தலைவர் ஆணா அல்லது பெண்ணா விபரம் 

10. வீட்டுத் தலைவர் பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியினர் / பிற எவர் என்பது குறித்த விபரம். 

11. கணக்கெடுப்பு நடத்தும் வீட்டின் உரிமை குறித்த தகவல் கேட்பு . 

12. கணக்கெடுப்பு நடக்கும் வீட்டில் பயன்பாட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை 

13. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை. 

14. குடிநீர் பெறும் முக்கிய ஆதாரம். 

15. குடிநீர் கிடைக்கும் இதர ஆதாரங்கள் குறித்த விபரங்கள் 

16. விளக்குகள் குறித்த விபரம் 

17. கழிவறை வசதிகள் குறித்த தகவல்கள்  

18. கழிவறை வகை குறித்த தகவல் 

19. கழிவு நீர் வெளியேற்றும் தகவல்கள். 

20. குளிக்கும் வசதி கிடைப்பது குறித்த தகவல்கள். 

21. சமையலறை வசதிகள் மற்றும் எல்பிஜி / பிஎன்ஜி இணைப்பு கிடைப்பு குறித்த தகவல்கள். 

22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள். 

23. ரேடியோ / டிரான்சிஸ்டர். 

24. தொலைக்காட்சி.  

25. இணையதள இணைப்பு வசதிகள் பற்றிய தகவல்கள் 

26. மடிக்கணினி / கணினி உள்ளதா என்பது குறித்த விபரங்கள் 

 27. தொலைபேசி / மொபைல் தொலைபேசி / ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்த விபரங்கள் 

 28. சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபெட் குறித்த விபரங்கள்

29. கார் / ஜீப் / வேன் வாகனங்கள் வைத்துள்ளது குறித்த விபரங்கள் 

30. வீட்டிலிருப்பவர்கள் உண்ணும் முக்கிய தானியங்கள் குறித்த விபரங்கள்.

31. தொடர்புக்கான மொபைல் எண் பெறுதல் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புக்கு மட்டும்). 

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) பற்றி தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கட்சிகள் பரப்பும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் வெடித்து வருகிறது. 

காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் என்.ஆர்.சி, என்.பி.ஆர் மற்றும் சி.ஏ.ஏ ஆகியவற்றை குழப்பி மத்திய அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபத்தையும் அதிருப்தியையும் தூண்டிவிட்டன. 

இந்த நிலையில்தான் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேர்க்கப்பட வேண்டிய விவரங்கள் பற்றியமேற்கண்ட கேள்விகளின் பட்டியலை அரசு முன் கூட்டியே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Please Comment