தமிழக மின்வாரியத்தில் வேலை. 2,400 காலியிடங்கள்!! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

தமிழக மின்வாரியத்தில் வேலை. 2,400 காலியிடங்கள்!!

தமிழக மின்வாரியத்தில் வேலை. 2,400 காலியிடங்கள்!!


தமிழ்நாடு மின்வாரியத்தில் 2,400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மின்வாரியத்தில் 1300 கணக்கீட்டாளர் பணியிடங்கள, 500 இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று 400 மின்னியல் உதவி பொறியாளர், 125 இயந்திரவியல் உதவி பொறியாளர் மற்றும் 75 கட்டடவியல் உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.  

அறிவிக்கை வெளியான நாள்: 8 ஜனவரி 2020 

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்: 10 ஜனவரி 2020 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 பிப்ரவரி 2020 

தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 13 பிப்ரவரி 2020 தேர்வு நடைபெறும் நாள்: பின்னர் அறிவிக்கப்படும் 

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினராக இருந்தால் 32 வயது வரையிலும், ஆதி திராவிடர், ஆதி திராவிடர் அருந்ததியர், ப.வ மற்றும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளாக இருந்தால் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்வித்தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருந்தால் போதும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அளவீடு கருவியின் மூலம் கணக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

Please Comment