இன்றைய செய்திகள் 14.01.2020(செவ்வாய்க்கிழமை) - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இன்றைய செய்திகள் 14.01.2020(செவ்வாய்க்கிழமை)

இன்றைய செய்திகள்14.01.2020(செவ்வாய்க்கிழமை)

தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்ப்போம்.
அனைவருக்கும் இனிய போகி நல்வாழ்த்துகள்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📚📚பொங்கல் பரிசு தொகுப்பு பெற  நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 21ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழக அரசு அறிவிப்பு                                         📚📚DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 விண்ணப்பிக்கத் தவறிய  தனித்தேர்வர்கள் ஜனவரி 20 & 21 தேதிகளில் அரசுத் தேர்வு சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📚📚குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியை 57 பேர் தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📚📚தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு பணியிடம் ஆகாது - தேர்வுநிலை, சிறப்புநிலை நிர்ணயம் தொடர்பான தணிக்கை தடையினை நீக்கம் கோரியதில்  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📚📚DGE - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் ( Service Centre ) மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
📚📚குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் :  தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
📚📚30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்யும் முகாம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 02.02.2020 அன்று நடத்தவுள்ளது.
📚📚பற்றாக்குறை ஊதியத்துடன் 10 ஆண்டுகளாக
பரிதவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்களின் கருணை மனுக்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். இவர்கள் சார்பாக  அரசுக்கும், எதிர்கட்சிகளுக்கும்
கருணை மனுக்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன
📚📚நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோவு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
📚📚எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 1.1.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்களுக்கு ஜனவரி 27-31 வரை   இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்  - அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு.
📚📚புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை: அரசு உத்தரவு
📚📚பிஎச்.டி. படிப்புக்கு புதிய நடைமுறை: அண்ணா பல்கலை. அறிமுகம்
📚📚நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
📚📚கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி -  பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என முத்தரிசி என்ற சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
📚📚தற்போதைய EMIS வலைத்தளத்தில் மாணவர்களுக்கு ஆதார் என் திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
📚📚அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கான தற்காலிக தெரி வுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
📚📚புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு  முதன்மைக்கல்வி அலுவலர்களை  உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்  என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
📚📚முக்கியப் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
📚📚சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 92 இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது.
📚📚கல்வியை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மதுக்கடைகளை அரசு நடத்தும் அவலம் நிலவுகிறது:கமல்ஹாசன்
📚📚இந்தியா, சீனாவுக்கு எதிராக செயல்படும் என்ஜிஓ-க்களுக்கு தடை: நேபாளம் அதிரடி
📚📚கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில், தான் டைவ் அடித்திருந்தால் ரன் அவுட்டிலிருந்து தப்பியிருந்திருக்கலாம் என தற்போது கருதுவதாக இந்திய அணி வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
📚📚உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது
பெங்களூருவில் கைதானவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர். பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
📚📚குரூப் -4 முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு வந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி சோதனை.
📚📚📚📚📚📚📚📚📚📚
🌹🌹பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
👉நிகழாண்டு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
👉தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் நிகழாண்டு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வுகளை அரசு தோ்வுத் துறை நடத்த உள்ளது . நிகழ் கல்வியாண்டில் பொதுத் தோ்வுக்கான வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதை இதுவரை அரசு தோ்வுத்துறை அறிவிக்கவில்லை . இந்தக் குழப்பம் காரணமாக அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் அமைப்பினா் , தோ்வுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனா்.
👉அப்போது, ‘பொதுத்தோ்வை பொருத்தவரை அரையாண்டுத் தோ்வில் , எந்த மாதிரியான வினாத்தாள் இடம் பெற்றதோ, அதே மாதிரியிலேயே பொதுத் தோ்வு வினாத்தாள் இருக்கும். எனவே , பிற வகை மாதிரி வினாத்தாள்களை பொருட்படுத்த வேண்டாம் . பள்ளிக் கல்வித் துறையின், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் மாதிரி வினாத்தாளையும் பொருட்படுத்த வேண்டாம்’ என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

No comments:

Post a Comment

Please Comment