கல்விச் செய்திகள் 13/01/2020 - துளிர்கல்வி

Latestதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, January 13, 2020

கல்விச் செய்திகள் 13/01/2020

🔥Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
🔥Join📱Our🌍TELEGRAM CHANNEL?👉Click Here
👍Follow📱Us ON🌍TWITTER👉Click Here

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மார்கழி 28 ♝ &*   
13.01.2020

🔥
🛡ஒமன் நாடு மன்னரின் மறைவையொட்டி  பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விட  தமிழ்நாடு அரசு உத்தரவு 

🔥
🛡கோர்ட்க்கு வந்ததால் ஸ்கூல் போகல.! சிறுமியின் பதிலை கேட்டு உறைந்த நீதிபதி -  பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என முத்தரிசி என்ற சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

🔥
🛡தற்போதைய EMIS வலைத்தளத்தில் மாணவர்களுக்கு ஆதார் என் திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானதல்ல என்று திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

🔥
🛡இனி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக்கில் கை வைத்தால்தான் சாப்பாடு - வருகிறது புதிய திட்டம். 
சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெற்றுச் செல்லலாம்.

🔥
🛡அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங் களுக்கான தற்காலிக தெரி வுப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡 நாளை (14.01.2020)  போகி பண்டிகையை முன்னிட்டு அனைத்து  பள்ளிகளுக்கும்  விடுமுறை அளிக்க தமிழக அரசிற்கு  அரசியல் தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர் - நாளிதழ் செய்தி 

🔥
🛡புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு  முதன்மைக்கல்வி அலுவலர்களை  உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்  என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .