படித்ததில் பிடித்தது 13/01/2020 - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

படித்ததில் பிடித்தது 13/01/2020

படித்ததில் பிடித்தது 13/01/2020

பாபாசாகேப்!   பிறரிடமில்லாத ஒரு தனித்துவமான அறிவாற்றல் உங்களிடம் இருக்கிறது" என  ஒருமுறை உணவு மேஜையில் உணவு உட்கொள்ள அமர்ந்திருக்கும் போது அவரிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:"நீங்கள் எப்படிச் சொன்னாலும் சரி, தனித்துவமான அறிவு என எதுவும் இல்லை. கடும் உழைப்பு, தளராத ஊக்கம்தான் அடிப்படை. உறுதியாக முடிவெடுத்துக் கவனமாகச் செயலாற்றும் எவரும் தாமாகவே ஆழ்ந்த அறிவாற்றலைப் பெறமுடியும்".

"பாபாசாகேப்! நீங்கள் சாதித்திருப்பவை இப்போது செய்து கொண்டிருப்பவை எல்லாம் உங்களுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதையே காட்டுகிறது இவையெல்லாம் ஒரு மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டவை"

"இல்லை இது சும்மா கட்டுக்கதை. என்னால் செய்ய முடிந்தவை  எல்லாமே எனது கடும் உழைப்பின் வெளிப்பாடு. அதற்கு அப்பால் வேறு எதுவுமில்லை. இந்த மீமானிடத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

யாரெல்லாம் கடுமையாக உழைக்கிறார்களோ அவர்கள் சாதாரண மனிதர்களை விட மேலெழுந்து முன்னேறுவார்கள் என நான் நம்புகிறேன். இதுதான் எனது உறுதியான எண்ணம்.

அறிவு நேர்த்தி என்பது தவத்தால் வருகிறது என நான் உணர்ந்து இருக்கிறேன்.அதற்கு தவம் என்பது எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டுக்குப் போய் தியானத்தில் ஆழ்வது அல்ல.
 தவம் என நான் சொல்வது 
ஒன்று துக்கத்தைத் தாங்க அதீத சக்தி. இரண்டு உழைப்பதற்கான அதீத ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும்."

தேவி தயாள் என்னும் நல்லோர்  உதவியாளராகப் பாபாசாகிப் 
அருகில் இருந்து பலவற்றை கவனித்தவர் பின்னாளில் அதை நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
(பக்கங்கள் 183- 184 பாபாசாகிப்பின் அருகிருந்து ஆங்கில தொகுப்பாசிரியர் சலீம் தமிழ் மொழிபெயர்ப்பு பிரேமா ரேவதி)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பகிர்வு :
 உரை வாள்" எ.கொ. அம்பேத்கார்.
9487343262
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment

Please Comment