👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here
*ஐபிஎல் தொடரின் வீரர்கள் எண்ணிக்கை அறிவிப்பு: ரசிகர்கள் ஜாலி*
*----------------------------------------------------------------------------------------*
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ADQPU7461G
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.
மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய 19 வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய 634 வீரர்கள் மற்றும் 11 வெளிநாடுகளை சேர்ந்த 258 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீரர்களின் அடிப்படை ஏலத்தொகை குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .