செல்வமகள் சேமிப்பு திட்டம்: முதலிடத்தில் தமிழகம் - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

செல்வமகள் சேமிப்பு திட்டம்: முதலிடத்தில் தமிழகம்

செல்வமகள் சேமிப்பு திட்டம்: முதலிடத்தில் தமிழகம் 


செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' (செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்) என்ற சிறு சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தொடங்கி வைத்தார். 


இத்திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.1,000, அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செய்ய முடியும். இத்திட்டம் பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் ஆகிய செலவுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் அதிகமானோர் இத்திட்டன் கீழ் டெபாசிட் செய்து வருகின்றனர். 


இந்திய அஞ்சல் துறையிலேயே இத்திட்டத்தில் தமிழகம் 18 லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகளை கொண்டு முதல் இடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2ம் இடத்திலும், கர்நாடகா 3ம் இடத்திலும் உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை இயக்குநர் எச்.ஆர்.வீராண கவுட் கூறியதாவது: 


இந்தியாவிலேயே தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தான் இத்திட்டத்தில் அதிக கணக்குகளை கொண்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 18 லட்சத்து 71 ஆயிரத்து 485 கணக்குகள் உள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 31.10.2019 வரை ரூ.3,666 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக உத்திர பிரதேசம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 16 லட்சத்து 64 ஆயிரத்து 649 கணக்குகள் உள்ளது. 3ம் இடத்தில் கர்நாடகா உள்ளது. 

அங்கு, 13 லட்சத்து 98 ஆயிரத்து 411 கணக்குகள் உள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 12 ஆயிரத்து 138 அஞ்சலகங்களில் இத்திட்டம் உள்ளது. கடந்த 1.4.2019 முதல் 18.11.2019 வரையில் அதாவது 8 மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 253 கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கணக்குகள் கொண்ட மண்டலத்தில் கோவை மண்டலம் முதல் இடத்திலும், 2ம் இடத்தில் சென்னை மண்டலமும், 3ம் இடத்தில் திருச்சி மண்டலமும் உள்ளது. 


 இதன்மூலம், டெல்லியில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தில் அதிக கணக்கு தொடங்கியதில் முதல் பரிசை தமிழ்நாடு பெற்றுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு அடுத்தபடியாக இந்த திட்டத்தில் தான் 8.4 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. அந்தந்த வருடத்திற்கான வட்டி விகிதத்திற்கு ஏற்ப முதிர்வு தொகை கணக்கிடப்படும். 

ADQPU7461G
இதேபோல், பள்ளிகளிலும், கிராமங்களிலும் இதற்கென சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. மாதம் தோறும் 364 சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. முகாமில் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில், வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் 6.60 லட்சம் பேரை இத்திட்டன் கீழ் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

இத்திட்டம் குறித்து மேலும் விவரங்களுக்கு இந்திய அஞ்சல் துறை இணையதள பக்கத்தை காணலாம் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் 'postinfo' என்ற செல்போன் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 10 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவது தான் எங்களின் முழுமையான இலக்கு என தெரிவித்துள்ளார். 


 Tamil Nadu is the first in the wealth saving program in India. Prime Minister Modi inaugurated the 'Sukhanya Samriti Yojana' (Wealth Savings Account) scheme on January 22, 2015 for the benefit of girls. Under the scheme, parents or guardians of children under the age of 10 can open a wealth daughter savings account in post offices or banks. 


 This account is able to deposit a minimum of Rs 1,000 each and a maximum of Rs 1 lakh 50 thousand every financial year. The scheme is very beneficial for the higher education and marriage expenses of girls and is being deposited under the scheme. Tamil Nadu tops the list with 18 lakhs 71 thousand 485 accounts in the Indian Postal Service. 


ADQPU7461G Uttar Pradesh is at 2 and Karnataka at 3. Commenting on this, HR Veeran Gout, Chief Director, Tamil Nadu Postal Circle, said: “The Tamil Nadu Postal Circle has the largest number of accounts in India. The Tamil Nadu Postal Circle has 18 lakhs 71 thousand 485 accounts. From the date of commencement of the scheme, the deposit amounted to Rs. Uttar Pradesh is the next step for Tamil Nadu. There are 16 lakhs 64 thousand 649 accounts. Karnataka is in 3rd place. There are 13 lakhs 98 thousand 411 accounts. 


The scheme is in 12 thousand 138 postcards in the Tamil Nadu Postal Circle. From 1.4.2019 to 18.11.2019 ie 1 lakh 21 thousand 253 new accounts opened in 8 months. Coimbatore has the highest number of zones in Tamil Nadu, followed by Chennai in 2nd and Trichy in 3rd. With this, Tamil Nadu won the first prize in the opening ceremony of the program in Delhi. The scheme is the 8.4 percent interest paid to the senior citizens' savings plan. Maturity amount will be calculated according to the interest rate for the respective year. Similarly, special camps are held in schools and villages. There are 364 special camps held monthly. Highlights of the program are being made public in the camp.


 In Tamil Nadu, by March 2020, we are actively working to add 6.60 lakh people under this scheme. For more details on this project you can find the Indian Postal Department web page or download the 'postinfo' cell phone processor in the Google Play Store. "Our overall goal is to bring all girls under the age of 10 to Tamil Nadu under this scheme," he said.

No comments:

Post a Comment

Please Comment