ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் அமல் - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் அமல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் அமல் செய்யப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித் துள்ளார். 

 பிஹார், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம் மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர் கள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர் களின் நலனுக்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், ஹரியாணா, ஜார்க்கண்ட், திரிபுரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்தில் ஏற்கெனவே இணைந்துள்ளன. 

இந்த திட்டம் ஆந்திரா, தெலங் கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை அடிப்படையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் தகவல்கள் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் கிடங்குகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மக்களவையில் நேற்று கூறியதாவது: ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் 2020 ஜூன் 1-ம் தேதி நாடு முழுவதும் அமல் செய்யப்படும். இந்த திட்டத்தால் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். 

ஆதார் தரவுகள், பிஓஎஸ் கருவி மூலம் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படும். இதேபோல ஒரே நாடு, ஒரே தரம் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகை யான தரம் நிர்ணயம் செய்யப் படுகிறது. 

 இதை தவிர்த்து தரம் நிர்ண யம் தொடர்பான அனைத்து பணிகளையும் இந்திய தர நிர்ணய அமைப்பு ஒருங்கிணைக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் தரம் உறுதி செய்யப்படும். சர்வதேச தரத்துக்கு இணையாக இந்தியாவின் தர நிர்ணயம் மேம்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Union Food Minister Ram Vilas Paswan has announced that the one-country, one-ration card scheme will be implemented across the country in June next year. 

Millions of workers from Bihar, West Bengal, Madhya Pradesh, Uttar Pradesh and Assam are working in the outer regions of Tamil Nadu, Andhra Pradesh, Karnataka, Kerala, Gujarat and Maharashtra. The central government is planning to implement a one-country, one-ration card scheme for their benefit. States like Maharashtra, Gujarat, Rajasthan, Haryana, Jharkhand, Tripura, Andhra Pradesh, Kerala, Karnataka and Telangana have already joined the project. The project is being tested in Andhra Pradesh, Telangana, Maharashtra, Gujarat and Odisha. 

For this purpose, the information of the ration card holders from all the states is combined. The warehouses of the state governments are also online. In this backdrop, Union Food Minister Ramvilas Paswan said in the Lok Sabha yesterday that the one-country, one-ration card scheme will come into effect on June 1, 2020. The migrant workers will be benefited by this scheme. The scheme will be successfully implemented through the Aadhaar Data and POS Tool. Similarly, only one country, one quality program is to be implemented. 

Currently, each type of quality is determined in each state. Apart from this, the Indian Standards Organization will coordinate all work related to quality assurance. This will ensure the quality of consumer goods across the country. India's quality standards will improve in line with international standards. He said so.


No comments:

Post a Comment

Please Comment