சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Sunday, December 1, 2019

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

*🔖♨சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை*

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.1)வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி, இதற்கு நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறைப்பகுதி ஓடைகளில் பலத்தமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க தடைவிதித்தனா்.

சனிக்கிழமை தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் விழா நடைபெற்றது, அப்போது சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் விழாவில் கலவ்து கொண்டு குளித்து சென்றனா். இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை விழாவில் கலந்து கொள்ள வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடையால் ஏமாற்றமடைந்து திரும்பினா். வனத்துறை ஊழியா் ஒருவா் கூறும் போது, நீா்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, அருவி பகுதித்து யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை என்றாா்..


*__________________________________*
  
.        *【♨】⚘ thulirkalvi.com ⚘*

No comments:

Post a Comment

Please Comment