இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்!

இனி கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்! 

இண்டேன் கேஸ்

வாடிக்கையாளர்கள்எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக வாட்ஸ்அப்மூலம் கேஸ் பதிவு செய்து கொள்ளும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான ஒன்று சமையல் எரிவாயு. சமையல் எரிவாயு தீரும் போது அதனை புக் செய்வதற்கு பெரும்பாலும் பெண்களை, குடும்ப தலைவர்களையே நாடவேண்டியுள்ளது. 

ADQPU7461G
ஆனால் இனி பெண்களே கூட எளிதாக வாட்ஸ்அப் மூலம் கேஸ் புக் செய்யலாம். முதலில்75888 88824 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் மொபைல் போனில் இன்டேன் கேஸ் வாட்ஸ்அப் புக்கிங் என சேமித்துக் கொள்ளவும். 

 1. கேஸ் இணைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறை. REFILL என மட்டும் டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பிற்குவந்துவிடும். 

 2. கேஸ் இணைப்பில் பதிவு செய்யாத மொபைல் என்னிலிருந்து கேஸ் பதிவு செய்யும் வழிமுறைகள் REFILL#<உங்கள் 16 இலக்க LPG ID> என டைப் செய்து அனுப்பினால் உடனே பதிவு ஆனதற்கான விபரங்கள் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும். Example. : REFILL#7500000051153961 

 3. உங்கள் கேஸ் பதிவின் STATUS யை தெரிந்து கொள்ள வழிமுறைகள். STATUS#<உங்கள் புக்கிங் Order நம்பர்> என டைப் செய்து அனுப்பினால் உடனே உங்கள் பதிவின் status தகவல் உங்கள் வாட்ஸப்பில் வந்துவிடும். 


 Example : STATUS#2-000120518460 மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக சமையல் எரிவாயு சிலிண்டரை புக் செய்து கொள்ளலாம்.

1 comment:

Please Comment