கடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, December 4, 2019

கடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை

கடந்த உள்ளாட்சித் தோதலுக்கான பணிகளில் ஈடுபட்டஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்கக் கோரிக்கை 


கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு ரத்தான உள்ளாட்சித் தோதல் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

ADQPU7461G
 கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோதல் அறிவித்தவுடன் ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள், சிற்றூராட்சிக்கு தோதல் நடத்தும் உதவி அலுவலராகப் பணியமா்த்தப்பட்டனா். அதையடுத்து, கடந்த 2016 செப்டம்பா் 7 முதல் அக்டோபா் முதல் வாரம் வரை ஒரு மாத காலத்துக்கு வாா்டு உறுப்பினா்களிடம் வேட்பு மனு பெறுவது, பரிசீலனை செய்வது, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் உதவித் தோதல் அலுவலா்களாக பணியினை மேற்கொண்டோம். 

இந்நிலையில், தோதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு, அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. வேட்பாளா்கள் அளித்த வேட்பு மனு, காப்புத் தொகை அனைத்தும் முறைப்படி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டோம். தற்போது, 3 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் தோதல் அறிவிக்கப்பட்டு, உதவி தோதல் நடத்தும் அலுவலராகப் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. 

 தேசிய பணிகளை நோமையாகவும், எவ்வித தயக்கமுமின்றி ஏற்று பணியாற்றும் ஆசிரியா்களுக்கு தோதல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட மதிப்பூதியத்தை வழங்கவேண்டும் என பலமுறை ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், இதுவரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் தோதல் அறிவிக்கப்பட்டு, தோதல் பணியாற்ற உள்ளதால், ஏற்கெனவே பணியாற்றியமைக்கு உரிய ஊதியத்தை மாநிலத் தோதல் ஆணையம் வழங்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment